இன்றைய (11-07-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூலை 11, 2022 உடன்பிறந்தவர்களின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும். பரணி : கவனம் வேண்டும். கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும். ------------------------------------ ரிஷபம் ஜூலை 11, 2022 பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் மறையும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் கிருத்திகை : ஏற்ற, இறக்கமான நாள். ரோகிணி : நம்பிக்கை ஏற்படும். மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும். ------------------------------------ மிதுனம் ஜூலை 11, 2022 உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான காலதாமதம் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். முக்கிய முடிவினை எடுக்கும் பொழுது உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் செயல்படவும். பரிசு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். திருவாதிரை : காலதாமதம் உண்டாகும். புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும். ------------------------------------ கடகம் ஜூலை 11, 2022 இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். ரகசிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் புனர்பூசம் : முயற்சிகள் கைகூடும். பூசம் : விருப்பம் நிறைவேறும். ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும். ------------------------------------ சிம்மம் ஜூலை 11, 2022 பயணங்கள் சார்ந்த விஷயங்களில் பொருளாதாரம் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். மின்சாரம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். கனிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மகம் : பொருளாதாரம் மேம்படும். பூரம் : புரிதல் ஏற்படும். உத்திரம் : மாற்றம் உண்டாகும். ----------------------------------- கன்னி ஜூலை 11, 2022 வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம் உத்திரம் : முயற்சிகள் அதிகரிக்கும். அஸ்தம் : தேடல் பிறக்கும். சித்திரை : எண்ணங்கள் கைகூடும். ------------------------------------ துலாம் ஜூலை 11, 2022 காப்பகம் தொடர்பான விஷயங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அமைதியான செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும். சுவாதி : கவனம் வேண்டும். விசாகம் : நம்பிக்கை மேம்படும். ----------------------------------- விருச்சிகம் ஜூலை 11, 2022 எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். காப்பீடு சார்ந்த துறைகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் விசாகம் : சிந்தனைகள் மேம்படும். அனுஷம் : மாற்றமான நாள். கேட்டை : குழப்பம் உண்டாகும். ------------------------------------ தனுசு ஜூலை 11, 2022 வாழ்க்கை துணையுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். ஆடம்பர சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மூலம் : சிந்தித்து செயல்படவும். பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்திராடம் : உதவி கிடைக்கும். ------------------------------------ மகரம் ஜூலை 11, 2022 உத்தியோக பணிகளில் உயர்வான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவமும், லாபமும் ஏற்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் உத்திராடம் : பிரச்சனைகள் குறையும். திருவோணம் : அனுபவம் ஏற்படும். அவிட்டம் : தெளிவு பிறக்கும். ------------------------------------ கும்பம் ஜூலை 11, 2022 வியாபார பணிகளில் லாபம் மேம்படும். புதிய நுட்பங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். சேவை சார்ந்த துறைகளில் வித்தியாசமான சூழல் ஏற்படும். ஆர்வம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அவிட்டம் : லாபம் மேம்படும். சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும். பூரட்டாதி : வித்தியாசமான நாள். ----------------------------------- மீனம் ஜூலை 11, 2022 சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர்கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம் பூரட்டாதி : மாற்றம் ஏற்படும். உத்திரட்டாதி : சாதகமான நாள். ரேவதி : அறிமுகம் கிடைக்கும். ---------------------------------

VIDEOS

RELATED NEWS

Recommended