இன்றைய (11-06-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூன் 11, 2022 குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். முயற்சிகள் ஈடேறும் நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். பரணி : எண்ணங்கள் ஈடேறும். கிருத்திகை : ஒத்துழைப்பு மேம்படும். ரிஷபம் ஜூன் 11, 2022 செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். தவறிய சில பொறுப்புகள் மற்றும் கோப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். சுகபோகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் கிருத்திகை : சுறுசுறுப்பான நாள். ரோகிணி : திறமைகள் வெளிப்படும். மிருகசீரிஷம் : புதுமையான நாள். மிதுனம் ஜூன் 11, 2022 உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். செல்வாக்கு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மிருகசீரிஷம் : நன்மை ஏற்படும். திருவாதிரை : ஆதரவு கிடைக்கும். புனர்பூசம் : சேமிப்பு மேம்படும். கடகம் ஜூன் 11, 2022 வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல் புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். பூசம் : ஆரோக்கியம் மேம்படும். ஆயில்யம் : மேன்மையான நாள். சிம்மம் ஜூன் 11, 2022 முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மகம் : வாய்ப்புகள் கிடைக்கும். பூரம் : ஒத்துழைப்பான நாள். உத்திரம் : தேவைகளை நிறைவேற்றுவீர் கன்னி ஜூன் 11, 2022 நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். அலைச்சல்கள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் உத்திரம் : வரவு கிடைக்கும். அஸ்தம் : புதுமையான நாள். சித்திரை : முதலீடுகள் அதிகரிக்கும். துலாம் ஜூன் 11, 2022 கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய தெளிவு உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஆதாயம் ஏற்படும். வர்த்தகம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். முன்னேற்றம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் சித்திரை : மகிழ்ச்சியான நாள். சுவாதி : ஆதாயம் ஏற்படும். விசாகம் : அறிமுகம் கிடைக்கும். விருச்சிகம் ஜூன் 11, 2022 நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் சிறு சிறு மாற்றத்தை செய்வீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும். அனுஷம் : உதவி கிடைக்கும். தனுசு ஜூன் 11, 2022 மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவில் இருந்துவந்த தடைகள் நீங்கி பொருளாதார நிலை மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். இன்னல்கள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும். பூராடம் : பயணங்கள் சாதகமாகும். உத்திராடம் : முன்னேற்றம மகரம் ஜூன் 11, 2022 எதிர்பாராத தனவரவு ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருப்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் உத்திராடம் : மகிழ்ச்சியான நாள். திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும். அவிட்டம் : பொறுப்புகள் கிடைக்கும். கும்பம் ஜூன் 11, 2022 மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விவேகமான முயற்சிகள் நற்பலனை உருவாக்கும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள். சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும். பூரட்டாதி : விவேகம் வேண்டும். மீனம் ஜூன் 11, 2022 கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். பார்வை தொடர்பான இன்னல்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்ப்புகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும். உத்திரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும். ரேவதி : நிதானம் வேண்டும்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended