Author: THE GREAT INDIA NEWS

Category: district

அரசு பொறியியல் கல்லூரி விடுதிகள் தனியார் வசம் ஒப்படைத்து இருந்தால் அது குறித்து பரிசீலத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி என்ற நோக்கோடு தமிழக அரசு படிப்படியாக தொடர்ந்து அரசு கலைக்கல்லூரி இல்லாத தொகுதிகளில் புதிய கல்லூரிகளை தொடங்கும் . தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார். 150 ஆண்டுகால பழமையும் பெருமையும் கொண்ட, தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி இன்று முனைவர் பட்ட ஆய்வுச்சுருக்க தொகுப்பு நூல் வெளியீடு மற்றும் பல்துறை துறைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ , மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா ஆகியவை கல்லூரியின் அண்ணா கலையரங்கில் கல்லூரி முதல்வர் துரையரசன் தலைமையிலும், தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் எழிலன் முன்னிலையிலும் நடைபெற்றது . இவ்விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு நூலை வெளியிட்டும், மாணவ மாணவியர்களுக்கு பரிசளித்தும் சிறப்புரையாற்றினார் . தான் 50 ஆண்டுகளுக்கு முன்னர், கும்பகோணத்தில் தங்கிருந்து, இதே கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியதையும் அவரது இயற்பெயரான க தெய்வசிகாமணி என்பதால் அப்போது அவரை கே டி என சுருக்கமாக கல்லூரியில் சக பேராசிரியர்களும், மாணவர்களும் அழைப்பார்கள் என்றும், இக்கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் தான் தனக்கு திருமணம் நடந்தது . நான் பட்டமளிப்பிற்கு சென்ற இடங்களில் எல்லாம் அதிக அளவில் பெண்கள் பட்டம் பெற்றதை காண முடிகிறது இது பெரியார், அண்ணா, கலைஞர் கண்ட கனவு அது தற்போது மெல்ல மெல்ல நிறைவேறி வருகிறது, கண்டிப்பாக, கலைஞர் வழியில் தொடர்ந்து பயணிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சி காலம் உயர்கல்வியில் பொற்காலமாக போற்றப்படும் நிலை ஏற்படும் . இதன் முன்னோட்டமாக தான் கடந்த ஒராண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 31 புதிய அரசு கலைக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும், 10 கல்லூரிகளுக்கு ஆய்வு படிப்பிற்;காண அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார் இந்நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா கோவி செழியன், ராஜ்யசபா எம்பி சண்முகம், எம்எல்ஏக்கள் கும்பகோணம் அன்பழகன், விக்ரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி, கும்பகோணம் கோட்டாட்சியர் லதா கல்லூரி பேராசிரிய பெருமக்கள் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவ மாணவியர்களும் பங்கேற்றனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

Tags:

#இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #kumbakonamnewstodaytamil #kumbakonamflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #ponmudi #ponmudiminister #dmkponmudi #governmentengineeringcollegesintamilnadu #governmentengineeringcollegesinchennai #governmentengineeringcollege #kumbakonamartscollege #arasuthalaimaikoradachelian #dmkmla #rajyasabamp
Comments & Conversations - 0