Author: THE GREAT INDIA NEWS

Category: district

உளுந்தூர்பேட்டையில் இருந்து ஒரு டிப்பர் லாரி நெய்வேலிக்கு சென்றுகொண்டிருந்தது இந்த லாரியை நெய்வேலி ஊமங்கலத்தைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் ஓட்டிச் சென்றார். லாரி உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலையில் உள்ள மேம்பாலத்தை கடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரமாக இருந்த மின்கம்பத்தில் மோதியது இதில் மின் கம்பம் அடியோடு சாய்ந்தது மேலும் மின் கம்பிகள் அறுந்து சாலையிலேயே விழுந்தது அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் நீலகண்டன் லாரியிலிருந்து கீழே குதித்து உயிர் தப்பினார் . தொடர்ந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் அருகிலிருந்த அடுத்தடுத்து 5 மின் கம்பங்கள் கீழே விழுந்து உடைந்து நொறுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர் அப்போது மின்கம்பம் மீது லாரி மோதியதில் 6 மின்கம்பங்கள் அடுத்தடுத்து கீழே விழுந்து உடைந்து நொறுங்கியது மின்கம்பிகள் அறுந்து விழுந்தது தெரியவந்தது. இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் வினியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி சுரேஷ்.

Tags:

#இன்றையசெய்திகள்உளுந்தூர்பேட்டை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday
Comments & Conversations - 0