Author: THE GREAT INDIA NEWS

Category: district

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றில் மதகு சாலை என்ற இடத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்க சென்ற மூன்று இளைஞர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். மதகு சாலை என்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு. கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் அணைக்கரை அருகே மதகு சாலை என்ற இடத்தில் நேற்று இரவு மனோஜ், ஆகாஷ் ,அப்பு, கொளஞ்சி, என்ற நான்கு நபர்கள் மணல் எடுப்பதற்காக சென்று உள்ளனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . இதில் நால்வரும் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர் மூலம் கொளஞ்சி மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டார். அதிர்ச்சியில் உள்ள இவர் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எஞ்சிய மூன்று பேரையும் கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொள்ளிடம் ஆற்றில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதாக கூறப்படுகிறது. வெள்ளத்தில் இம்மூவரும் எங்கு அடித்துச் செல்லப்பட்டார்கள் என்பது குறித்து ஆங்காங்கே தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மதகு சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதகு சாலை கொள்ளிடம் ஆற்று பகுதியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தற்போது ஆய்வு மேற்கொண்டு உள்ளார் தற்போது கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் யாரும் கொள்ளிடம் ஆற்றில் இறங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளம் தொடர்பாக தொடர் எச்சரிக்கைகள் விடப்பட்ட நிலையிலும் எச்சரிக்கையை மீறுவதால் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். கொள்ளிடம் ஆற்றங்கரை ஓரங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக வெள்ளம் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இம்முகாம்களில் தாராளமாக தங்கிக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:

#kumbakonamnews #kumbakonamnewsintamil #kumbakonamnewslive #kumbakonamnewstoday #kumbakonamnewstodaytamil #kumbakonamnewspapertoday #இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigaltamilnadu #indrayasithigalkumbakonamtamilnadu #todaynewstamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kumbakonamtodaynews #kumbakonamlatestnews #kumbakonamnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0