Author: THE GREAT INDIA NEWS

Category: sports

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் தமிழக அரசு, தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்ப கலையை அங்கீகரித்து, அரசு பணிகளில் மூன்று சதவீதம் இடஒதுக்கீடு செய்ததை தொடர்ந்து ஏராளமான சின்னஞ்சிறு குழந்தைகள் ஆர்வமாக சிலம்பாட்டத்தை கற்று வருகின்றனர். இவர்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு மாவட்டத்திலிருந்து பல குழந்தைகள் சிறப்பாக சிலம்பம் சுற்றி அசத்தி பரிசுகளை தட்டிச்சென்றனர். கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சோழர் சிலம்பம் கழகம் சார்பில் இரண்டாமாண்டு தனித்திறன் சிலம்பு போட்டி பழைய முருகன் தியேட்டரில் சோழர் சிலம்ப கழகப் பொதுச்செயலாளர் தலைமை ஆசான் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தஞ்சை நாகை மயிலாடுதுறை திருச்சி கரூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்திலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் ஓபன் தனித்திறன் சிலம்பு போட்டியில் 5 வயதிலிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு வயது பிரிவினருக்கான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன. தங்களது தனித் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர் குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிரிவில் சிலம்பம் சுற்றிய குழந்தைகளை காண்பவரைகளை தங்களின் தனித்திறனை அழகாக வெளிப்படுத்தி ஆசத்தி பரவசப்படுத்தினர். ஐந்து வயதுக்குட்பட்டோர், 5 - 7 வயதுக்குட்பட்டோர், 8 - 10 வயதுக்குட்பட்டோர், 11 - 13 வயதுக்குட்பட்டோர், 14 - 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டோர் என 6 பெரும் பிரிவுகளாக சிலம்பாட்டத்தில் தனித்திறன் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பேட்டி : குமார் சிலம்பாட்ட பயிற்சியாளர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

Tags:

#இன்றையசெய்திகள்கும்பகோணம் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kumbakonamtodaynews #kumbakonamlatestnews #kumbakonamnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0