• முகப்பு
  • நீதிமன்ற உத்தரவுப்படி மூன்று அரசு பேருந்துகள் ஜப்தி ?

நீதிமன்ற உத்தரவுப்படி மூன்று அரசு பேருந்துகள் ஜப்தி ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சின்ன காஞ்சிபுரத்தில் வசித்து வந்தவர் தேவேந்திரன் பாரிக்கர். வயது 54. இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண் துறையில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.இவருக்கு சாயா என்ற மனைவியும், ஜோதி, வர்ஷா என இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவர் கடந்த 2018ல் காஞ்சிபுரம் டி.கே., நம்பி சாலையில் தன் இருசக்கர வாகனத்தில் தேவேந்திரன் பாரிக்கர் சென்றபோது தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் வந்த அரசு பேருந்து மோதியதில் தேவேந்திரன் பாரிக்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து தேவேந்திரன் குடும்பத்தினர் போக்குவரத்து கழகம் மீது வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு கோரினர். இவ்வழக்கானது காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்தது. இந் நிலையில் வழக்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதி கருணாநிதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 96.41 லட்சம் ரூபாயை போக்குவரத்து கழகம் இழப்பீடாக தரவேண்டும் என உத்தரவிட்ட நிலையில் அரசு போக்குவரத்து கழகம் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த விசாரணையில் மாவட்ட நீதிமன்றம் கூறிய தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக தரவேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இதுநாள் வரை இழப்பீடு வழங்காததால் வட்டியுடன் சேர்த்து 1.17 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க வேண்டும், அதுவரை மூன்று அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய வேண்டும் என காஞ்சிபுரம் நீதிமன்ற நீதிபதி சந்திரன் உத்தரவிட்டதை தொடர்ந்து , நீதிமன்றம் ஊழியர்கள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலக வளாகம் வழியாக சென்ற தமிழக அரசு போக்குவரத்து கழகம் காஞ்சிபுரம் பணிமனையைச் சேர்ந்த மூன்று பேருந்துகளை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த். இன்றைய செய்திகள் காஞ்சிபுரம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,political news,chennai news,news,Kanchipuram news,Kanchipuram tamil news,latest kanchipuram tamil news,Government buses confiscated,court,government buses

VIDEOS

RELATED NEWS

Recommended