Author: THE GREAT INDIA NEWS

Category: crime

தருமபுரி அருகே விவசாய தோட்டத்தில் இருந்த மின் வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்த விவகாரத்தில் பாலக்கோடு வனச்சரகர் உள்ளிட்ட மூன்று வனத் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். தருமபுரிமாவட்டம் மாரண்ட அள்ளி அடுத்த நல்லாம் பட்டி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரது விவசாயதோட்டத்தில் அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி, கடந்த 13 ம்தேதி காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாரண்ட அள்ளி போலீசார் வழக்குப் பதிவுசெய்து, விவசாயி சீனிவாசனை கைது செய்தனர். இந்தநிலையில், யானை உயிரிழந்தவிவகாரத்தில் அலட்சியமாக செயல் பட்டதாக கூறி பாலக் கோடுவனச்சரகர் உள்ளிட்ட மூன்று வனத்துறையினர் பணியிடைநீக்கம் செய்யப் பட்டனர். அதன்படி, காட்டு யானையை பாது காக்கும் பணியினைசிறப்பாக மேற்கொள்ளாதது, மின் வேலி அமைத்திருப்பதை கவனித்து நடவடிக்கை எடுக்க தவறியது உள்ளிட்ட காரணங்களுக்காக பாலக் கோடு வனச்சரகர்செல்வம், வனவர்கணபதி மற்றும் காப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து தருமபுரி மண்டல வனபாது காவலர் பெரியசாமி உத்தரவிட்டு உள்ளார். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

Tags:

#இன்றையசெய்திகள்தருமபுரி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #kumbakonamnewstodaytamil #kumbakonamflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #todaystamilnadunews #indiabusinesstoday #dharmapurinews #dharmapurilatestnews #dharmapuritodaynews
Comments & Conversations - 0