• முகப்பு
  • district
  • ஃபோர்டு கம்பெனி ஊழியர்கள் 6வது நாளாக பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டம் .

ஃபோர்டு கம்பெனி ஊழியர்கள் 6வது நாளாக பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டம் .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் இயங்கி வரும் பிரபல ஃபோர்டு (FORD) கம்பெனியை வருகிற ஜீன் 20 ஆம்தேதி நிரந்தரமாக மூடப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பெனி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம் என பலதரப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டம் துவங்கிய ஆரம்பகால கட்டத்தில் சீனியர், ஜுனியர் (சர்வீஸ்) அடிப்படையில் செட்டில்மென்ட் முறையாக வழங்கப்படும் என கம்பெனி நிர்வாகம் தரப்பில் உத்திரவாதம் அளித்திருந்தனர்.ஆனால் இதுநாள் வரையில் எந்தவித செட்டில்மென்டும் அளிக்கப்படவில்லை எனது தொழிலாளர் தரப்பில் கூறப்படுகிறது. அதனால் கடந்த 10தினங்களுக்கு முன்பு தொடர்ந்து இரண்டு நாட்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோட்டாட்சியர், வட்டாட்சியர், காவல்துறை உள்ளிட்டோர் கம்பெனி நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊழியர்கள் தரப்பில் வைத்த கோரிக்கையின்படி மே மாதம் இறுதிக்குள் ஊழியர்களுக்கான செட்டில்மென்ட் பற்றி இதுவரை எந்தவித உறுதியும் அளிக்கப்படவில்லை என்பதால், கடந்த திங்கட்கிழமை பணிக்கு வந்த ஊழியர்களிடம் இனி போராட்டத்தில் ஈடுபட மாட்டோம் என கையெழுத்து வாங்கிய பிறகே வேலைக்கு உள்ளே செல்ல அனுமதிப்போம் என நிர்வாகம் கெடுபிடி செய்ததால், கடந்த திங்கட்கிழமை அன்று காலை 6மணி முதல் தொடர்ந்து இன்று 6வது நாளாக பணியை புறக்கணித்து ஏராளமான தொழிலாளர்கள் கம்பெனி வாயிலில் அமர்ந்து இரவு பகலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended