• முகப்பு
  • கல்வி
  • கோடிமங்கலம் நடுநிலைப்பள்ளியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா

கோடிமங்கலம் நடுநிலைப்பள்ளியில் ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா

TGI

UPDATED: May 16, 2023, 8:07:15 PM

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் இல்லம் தேடிக் கல்வி, பள்ளிக்கல்வித்துறை ஆகியன இணைந்து ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நிகழ்ச்சியை நடத்தியது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாவித்திரி தலைமை வைத்தார் ஊராட்சித் தலைவர் விஜி இல்லம் தேடிக் கல்வியை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இல்லம் தேடி கல்வி தன்னார்வத் தொண்டர் அடைக்கலம் மேரி வரவேற்றார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மயிலாடுதுறை மாவட்ட இணை செயலாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து பேசுகையில்,

தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு கருத்தாளர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அறிவியல் தொழில் நுட்பம் பொறியியல் கணிதம் ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அறிவாற்றலை வளர்ப்பதற்காகவும் வானவில் மன்றங்கள் அமைத்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறையுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து பயிற்சி மற்றும் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

வானவில் மன்ற கருத்தாளர் ஷர்மிளா மந்திரமா? தந்திரமா?, கணிதப் புதிர்கள், காகிதக் கலை,கைரேகை மற்றும் வரைபடம் ஆகியவற்றில் செய்து காண்பித்து மாணவர்களை உற்சாகமாக ஈடுபடுத்தி வழி நடத்தினார்.

இதேபோல் கோனேரிராஜபுரம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் கருத்தாளர் ராஜா ராமன் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வ தொண்டர்கள் ரஞ்சனி, கலையரசி,மதிவதனி,கீதா ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended