• முகப்பு
  • pondichery
  • தமிழகத்தில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது தனித் தனிச் சுடுகாடுகள் உள்ளது இதுதான் திராவிட மாடலா !

தமிழகத்தில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது தனித் தனிச் சுடுகாடுகள் உள்ளது இதுதான் திராவிட மாடலா !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி மீனவர்களின் நலனுக்காக மீனவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். இதனை அடுத்து பா.ஜ.க கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்..... திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தமிழகத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள், ஆனால் 2016 ஆண்டிற்குப் பிறகு ஒரு மீனவர் மீது கூட துப்பாக்கிச்சூடு நடைபெறவில்லை என்று கூறினார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அத்தனை பேரையும் இந்திய அரசு மீட்டுள்ளது என்று தெரிவித்த எல். முருகன் மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அபாண்டமான பழி என்றார். தமிழகத்தில் திமுக அரசால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே உள்ளது என்றும் மகளிர்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படும் என்று அறிவித்தார் இதுவரை வழங்கப்படவில்லை இதுபற்றி கேட்டாள் முதல்வர் வாய் திறப்பதே இல்லை என்று குற்றம் சாட்டிய எல். முருகன். தமிழகத்தில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது தனித்தனி சுடுகாடுகள் அமைந்துள்ளது இதுதான் திராவிட மாடலா என கேள்வி எழுப்பினார். ஆன்மீக பூமியான தமிழகத்தை குட்டிச்சுவராக மாற்றி வருவதுதான் திராவிட மாடல் என்று கூறிய அவர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மறைக்கவே திராவிட மாடல் பற்றி பேசி வருவதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் மாநில ஆளுநருக்கு என்று அதிகாரம் உள்ளது, ஆட்சியாளர்களுக்கு தகுந்தார்போல் மாநில கவர்னர்கள் செயல்பட முடியாது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். பேட்டியின்போது புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர். பேட்டி : எல் முருகன் மத்திய இணை அமைச்சர். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended