Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

ஐம்பதுக்கும் நூறுக்கும் அளவில்லா பிரியாணி எப்படி குடுக்க முடியும்? சின்ன தில்லாலங்கடி வேலை செய்தால் போதும். எப்படி என்று பார்க்கலாமா? முதலில் அரிசி சீரக சம்பா அல்லது பாஸ்மதி அரிசி உபயோகிக்காமல் பிரியாணி குருணை அரிசி(கிலோ 35 ரூபாய்) தான் உபயோகிக்கனும். நெய்யோ கடலை எண்ணையோ உபயோகிக்காமல் ஏற்கனவே உபயோகித்து வடிகட்டி சுத்தம் செய்த எண்ணையுடன் பாமாயில் டால்டா(கோவிலில் விற்கும் நெய் விளக்கில் இருக்குமே அது தான்) கலந்து சமையலுக்கு உபயோகிக்கனும். அடுத்து உயிருடன் கிடைக்கும் கோழி வாங்காமல் கட்டிங் ஜனதா என செல்லமாக அழைக்கப்படும் கறி நீக்கப்பட்டு எலும்பும் கொழுப்புமாய் ஐஸ்பெட்டியில் பல நாட்களாய் பாதுகாக்கப்பட்டது கிலோ 60 ரூபாய்க்கு வாங்கி உபயோகிக்கனும். இருபதுக்கும் முப்பதுக்கும் கிடைக்கும் சில்லி சிக்கன் மற்றும் சிக்கன் 65 இந்த ஜனதாவிலிருந்து தான் தயாரிக்கப்படுகின்றது. இடையிடையே எலும்பில்லா கறி போல் வாயில் தட்டுப்பட ஐஸ்பெட்டியில் பல நாட்களாய் பாதுகாக்கப்பட்ட கல்லீரலை (கிலோ 80 ரூபாய்) சிறியதாய் வெட்டி சேர்க்க வேண்டும். அடுத்து இயற்கை வாசனை பொருட்கள் கிராம்பு பட்டை ஏலக்காய் ஜாதிக்காய் ஜாதி பத்திரி பிரிஞ்சி இலை கல்பாசி மராட்டி மொக்கு என எதையும் சேர்க்க கூடாது. அதற்கு பதில் செயற்கை சிக்கன் பிரியாணி எசன்ஸ் (20 ml 80 ரூபாய் ஒரு மாசத்துக்கு வரும்) சில சொட்டுக்கள் சேர்த்தால் போது.சும்மா கம கமனு தெருவில் போகும் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். அடுத்து எலுமிச்சம்Nபழமோ தயிரோ சேர்க்க கூடாது அதற்கு பதில் லெமன் சால்ட் ஒரு சிட்டிகை சேர்த்தால் போதும். வாயில் பிரியாணி வைத்ததும் சும்மா ஜொள்ளு வடியும். அடுத்து கொஞ்சம் லேசாக அழுகிய வெங்காயம் வாங்கி வெட்டி சுத்தம் செய்து நல்ல வெங்காய துண்டுகளையும் தக்காளி (கடைகளுக்காக உடைந்த தக்காளி கிடைக்கும்). நேற்றைய கொத்தமல்லி புதினா போட்டு வாசத்தை கூட்டிக்கொள்ளலாம். முடிந்தால் சாப்பிடலாம். அளவில்லாமல் பிரியாணி கொடுப்பார்கள்.ஒன்று வாங்கினால் இரண்டு கூட இலவசமாய் கிடைக்கும். காசு கொடுத்து உடலை கெடுத்துக் கொள்ளாதீர்கள். *அனுபவஸ்தன்*

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation #food
Comments & Conversations - 0