கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் நாச்சியார் கோவில் தேர்பவனி.

ரமேஷ்

UPDATED: May 22, 2023, 9:01:17 AM

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவிலில், திருப்பந்துறை கிராமத்தில் உள்ள புனித அடைக்கல அன்னை திருத்தலத்தில் ஆண்டுதோறும், தேர்பவனி, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு விழா, கடந்த 10ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு, மறைமாவட்ட முதன்மை குரு பங்குச்சந்தை எட்வர்டு தலைமையில் திருக்கொடி ஏற்றி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அருட்தந்தையர்களால் செபமாலை, நவநாள் செபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

முன்னதாக காலை திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியான் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினார்கள்.

இனைததொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 5 தேரில் புனித அந்தோனியார், புனித அடைக்கல மாதா, சம்மனசு, சூசையப்பர், ஆடம்பர தேரில் எழுந்தருள தேர்பவனி வாணவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது.

தேர் பவனியின் போது, பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

இந்த நிகழ்வில் ஏராளமானோர் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நாட்டாமைகள் பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராமவாசிகள் சிறப்பாக செய்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended