Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

புதூ.... சாலை புதூ.... கால்வாய்.... திருவேற்காடு மக்களே சூப்பரூ...... இப்படி சொல்லும் அளவுக்கு திருவேற்காடு நகராட்சியின் தரம் கிடையாது. படத்தில் உள்ளது 6 மாதம் கூட ஆகாத சாலையோர வடிநீர் கால்வாய். புத்தம் புது கால்வாய் பொத்தலாகி போகிறது. தரம் அப்படி. இதை பார்த்து திருவேற்காடு சுந்தரவிநாயகர் நகரில் இந்த கால்வாய் போடப்படாத தெரு மக்கள் நிம்மதி பெரு மூச்சு விடுகின்றனர். இது போல கால்வாய் போடுவதை விட சும்மா கிடக்கலாம் என்கிறார்கள். திருவேற்காடு சுந்தர விநாயகர் நகரில் கணேசன் தெருவில் கழிவுநீர் கால்வாய் கிடையாது. குடிநீர் வராது ஆனால் வரி பில்லில் இதற்கான கட்டணங்கள் வசூவிக்கப்படுவதாக மக்கள் புலம்புகிறார்கள். மொத்தத்தில் பால்வாடி பள்ளிக்கு பல்கலைக்கழகம் என பெயர் பலகை வைத்தது போல திருவேற்காடு கிராமத்திற்கு கிராம பஞ்சாயத்துனு பேர் வைக்காமல் வரியை உயர்த்தி வாங்குவதற்காகவே நகராட்சினு பெயர் வைத்துள்ளதாக மக்கள் கூறுகிறார்கள். தெருவிளக்குகள் மண்ணெண்ணெய் விளக்கை விட ஒளி பிரகாசமாக வீசுகிறது. வீட்டுவிளக்கிற்கும் தெரு விளக்கிற்கும் வித்தியாசத்தை பாருங்கள். அத்துடன் அந்த தெருவில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தேங்குவதை பாருங்கள். திருவேற்காடு சுந்தர விநாயகர் நகர் மக்களின் ஒரே ஒரு நம்பிக்கை நட்சத்திரம் நகராட்சி மன்ற உறுப்பினர் திருமதி ஆஷாஆசிர்வாதம் அவர்கள் மட்டுமே. காரணம் இதற்கு முன் இவரது தந்தை ஆசிர்வாதம் என்பவர் இந்த பகுதிக்கு கவுன்சிலராக இருந்த போது செய்த சிறப்பான சேவை தான். தந்தையின் சேவையை மகள் செய்வார் என சுந்தரவிநாயகர் நகர் கணேசன் தெரு மக்கள் ஆணித்தனமாக அடித்து சொல்கிறார்கள். கண்டிப்பாக முன்னாள் கவுன்சிலர் ஆசிர்வாதத்தின் மகள் இந்நாள் கவுன்சிலரான ஆஷா ஆசிர்வாதம் அவர்கள் எங்கள் பகுதிக்கு முதலில் கழிவு நீர் கால்வாய் பிறகு தரமான தார் சாலை மேலும் தினசரி இரு வேளை குடிநீர் வசதி மற்றும் பிரகாசமான எல்ஈடி தெருவிளக்கு பொன்றவற்றை அமைத்து தருவார் என மக்கள் அதீதமாக நம்புகிறார்கள். செய்தியாளர்: பா. கணேசன்.

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0