• முகப்பு
  • திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டத்தினை

திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டத்தினை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டத்தினை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுதுறை அமைச்சர் பி.மூர்த்தி வடம்பிடித்து தொடங்கி வைத்தனர்.இந்நிகழ்வில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் தலைவர் உ.மதிவாணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்விஜயகுமார் மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசியாவிலேயே மிகவும் பழமையான மிகப்பெரிய திருத்தேர் திருவாரூர் தேர் ஆகும்.இத்திருத்தேர் பல நூற்றாண்டுக்கு முன்பிருந்தே ஓடத்துவங்கியதாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளது.புகழ்பெற்ற இந்த திருத்தேர் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்ததை மீண்டும் டாக்டர் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது இந்த திருவாரூர் தேரை மீண்டும் புதுப்பித்து ஓடச்செய்த பெருமைக்குரிய தேராகும். 95 அடி உயரமும் 450 டன் எடையும் கொண்ட இந்த திருத்தேரை வடம் பிடித்து இழுப்பதற்கு ஒன்றரை டன் எடை கொண்ட 1 கி.மீ நீளமுள்ள வடக்கயிறு பயன்படுத்தப்படுகிறது.இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற இந்த திருத்தேர் கடந்த ஆட்சி காலத்தில் எந்தவித பராமரிப்பும் இல்லாமல்,சிதிலமடைந்து ஓடாமல் இருந்து வந்தது.இந்நிலையில் தமிழக அரசு பொறுப்பெற்றதும் தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு பக்தர்களும்,ஆன்மிகவாதிகளும் கொண்டு சென்றனர். இதையடுத்து இந்த திருத்தேரை உடனடியாக செப்பனிட்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடையுமாறு இயக்கிட தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார் இதையடுத்து கடந்த 25.10.2021 திருவாரூரில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கனமழையின் காரணமாக சரிந்து விழுந்த கமலாலயக்குளக்கரை தென்கரை மதில் சுவரை பார்வையிட்ட பின், அங்கிருந்த ஆழித்தேரையும் பார்வையிட்டார்.இந்த திருத்தேரை செப்பனிடுவது தொடர்பாக தமிழக முதல்வர் அவர்கள் வழிகாட்டுதல்படி கடந்த 20.12.2021 அன்று அனைத்து துறையினையினரும் பங்குபெற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் ஆழித்தேரை புதுப்பித்து மீண்டும் இயக்கிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருத்தேர் புதுப்பிக்கும் பணி துரிதகதியில் நடைபெற்றது.இந்த ஆண்டாவது ஆழித்தேரோட்டம் நடைபெறுமா என்ற பக்தர்களின் கனவை மெய்ப்பிக்கும் விதத்தில் திருத்தேர் பணி சிறப்பாக நடைபெற்று முடிந்து,15.03.2022 காலை ஆழித்தேர் திருத்தோரோட்டம் துவக்க விழா நடைபெற்றது.பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்து திருவாரூர் ஆழித்தேர் மீண்டும் ஓடத் துவங்கியதும் அதனைக் கண்டு பக்தர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். இந்நிகழ்ச்சியில் மடாதிபதிகள் திருவாரூர் ஆதினம்,தருமபுரம் ஆதினம்,வெள்ளக்குறிச்சி ஆதினம்,அனைத்துதுறை அரசு அலுவலர்களும்,ஆன்மிகவாதிகளும், பக்தர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended