Author: THE GREAT INDIA NEWS

Category: aanmegam

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்கா வடகட்டளை மாரியம்மன் கோவில் திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து புனவாசல் கிராம மக்கள் பெரியவர்கள் சிறியவர்கள் என்று அனைவரும் டிராக்டர் மற்றும் வாகனங்களில் சென்று இந்து சமய அறநிலைத்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலையினை கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து , வடபாதிமங்கலம் சிவன் கோயிலில் இருந்து அம்மன் சிலையை எடுத்து வரப்பட்டு புனவாசல் விநாயகர் ஆலயத்திலிருந்து பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் என அனைவரும் இணைந்து தாம்பழங்களில் சீர்வரிசை எடுத்துக்கொண்டு சாலை நடுவே மலர்தூவி அம்மனை வரவேற்று , மங்கள வாத்தியங்கள் முழங்க கிராமவாசிகள் பெண்கள் , குழந்தைகள் , பெரியவர் , சிறியவர் என்ற வித்தியாசம் பாராமல் அம்மன் சிலை வைக்கப்பட்டு இருந்த பெட்டியினை அனைவரும் தங்கள் தலையில் ஒவ்வொருவராக சுமந்தபடி புனவாசலில் அமைந்துள்ள ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின்பு பெட்டியில் இருந்த அம்மன் சிலையை அலங்கரிக்கப்பட்ட மேடையின் மீது வைத்து பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டு பொதுமக்கள் வழிபட்டனர் இந்த திருவிழாவானது தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும். தினமும் அம்மன் வாகனத்தில் எழுந்தருளி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிராமத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அர்ச்சனை செய்து பொதுமக்கள் வழிபடுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு பத்திரிக்கை அடிப்பது கிடையாது மேலும் நிதி வசூல் எதுவும் செய்வதும் கிடையாது கிராம மக்கள் ஆர்வமாக தன்னெழுச்சியாக திருவிழாவை வெகு விமர்சையாக நடத்துவது ஆண்டுதோறும் நடத்துவது வழக்கமாக கடைபிடிக்கபடுகிறது. திருவாரூர் செய்தியாளர் இளவரசன்

Tags:

#aanmeegam #anmigam #anmegam #thiruvarurnews #thiruvarurnewslive #thiruvarurnewstoday #thiruvarurnewsintamil #இன்றையசெய்திகள்திருவாரூர் #இன்றையமுக்கியசெய்திகள்திருவாரூர் #இன்றையதலைப்புச்செய்திகள்திருவாரூர் #thegreatindianews #tginews
Comments & Conversations - 0