• முகப்பு
  • district
  • மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 650 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்.

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 650 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் இன்று (20.06.2022) கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 650 கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டார். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு. விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 650 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் தனித்துணை வெங்கடேசன், துணை ஆட்சியர், ஆட்சியர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டம் ஆதிதிராவிடர் நல அலுவலர் ஆ.சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ். வருவாய் கோட்டாட்சியர்கள் வி.வெற்றிவேல் (திருவண்ணாமலை), பா.வினோத்குமார் (செய்யார்) மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்.

VIDEOS

RELATED NEWS

Recommended