• முகப்பு
  • திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு ஆறு கழுதைகளை கடத்திச் ச

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு ஆறு கழுதைகளை கடத்திச் ச

Vijaya lalshmi

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு ஆறு கழுதைகளை கடத்திச் செல்ல முயன்ற ஒருவர் கைது. அவர்களிடம் இருந்து மினி லாரி பறிமுதல். தப்பி ஓடிய 4 பேருக்கு காவல்துறையினர் வலைவீச்சி ஆந்திர மாநிலத்தில் உடல் வலிமை பெறுவதற்காக பலரும் கழுதை கறியை உண்டு வருகின்றனர். இதற்கு அறிவியல் பூர்வமாக எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் கழுதைகளை இறைச்சிக்காகக் கொல்வது சட்டப்படி குற்றம் என்று அம்மாநிலத்தில் அறிவித்திருந்தது. அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது. ஆந்திராவில் போதிய கழுதைகள் இல்லாததால் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் போன்ற மாநிலங்களில் இருந்து கழுதைகள் இறைச்சிக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த நிலையில் இன்று(டிசம்பர் 07) வேலூர் அண்ணாசாலையில் தெற்கு காவல்துறையினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது மினி லாரி ஒன்றில் கழுதைகளை ஏற்றி கொண்டு ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் வந்தனர். காவல்துறையினரை கண்டதும் லாரியை நிறுத்தாமல் சென்றுள்ளனர். அதனை விரட்டி சென்ற காவல்துறையினர் மக்கான் சிக்னல் அருகே லாரியை மடக்கினர். அப்போது அதில் வந்த 4 பேர் தப்பி ஓடிய நிலையில் லாரி ஓட்டுநரான சீனிவாசலால்(50) என்பவரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் இருந்து கழுதைகளை இறைச்சிக்காக ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு கொண்டு செல்வது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்துடன் 6 கழுதைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended