• முகப்பு
  • tamilnadu
  • திருவள்ளூர் மாவட்டத்திலேயே மிக சிறந்த அரசு மேல்நிலைப்பள்ளி.

திருவள்ளூர் மாவட்டத்திலேயே மிக சிறந்த அரசு மேல்நிலைப்பள்ளி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவள்ளூர் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளி. 100% தேர்ச்சியை கொடுத்துவரும் பள்ளி. நல் ஒழுக்கம் ! நல்ல பயிற்சி ! நல்ல வெற்றி ! அரசு மேல்நிலைப் பள்ளி குத்தம்பாக்கம் ( ஆவடி கல்வி மாவட்டம் ) - 600124 . திருவள்ளூர் மாவட்டம் . இப்பள்ளி 2011 ல் தரம் உயர்த்தப்பட்டு உயர் நிலைப் பள்ளியாகவும் பின் 2017 ல் மேல்நிலைப் பள்ளியாகவும் , தரம் உயர்த்தப்பட்டது . 2012 ல் இருந்து SSLC- ல் 2017 வரை தொடர்ந்து 100 % வெற்றியும் பின் 2018 ல் 98 % வெற்றியும் 2019 - 2022 ல் 100 % வெற்றியும் பெற்றுள்ளது . மேல்நிலைக் கல்வியில் 2018-19ல் 95 % -ம் 2020-21ல் 100 % வெற்றியும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி அளித்து தேர்ச்சியில் நமது பகுதியில் முதன்மை நிலையிலும் ஒழுக்கம், கட்டுப்பாடு என திறன்மிக்க மாணவர்களை உருவாக்கும் நல்லாசிரியர்களையும் கொண்டது . இப்பள்ளியில் தேர்ச்சி குறைகிறது எனில் பள்ளிக்கு வருகை தராத மாணவர்களால் மட்டுமே. RMSA மூலம் 6 வகுப்பறைகள் , 1 கணினி அறை . 1 நூலகம் .1 ஆய்வகம் , தனித்தனியான ஆசிரியர்கள் அறை என வகுப்பு 6 முதல் 10 வரைக்கும் , NABARD மூலம் மேல்நிலைக் கல்விக்காக புதியதாக ரூ .3.453 கோடியில் 16 வகுப்பறைகள் , தனித்தனி ஆய்வுக் கூடங்கள் என நவீன வசதியுடன் காற்றோட்டத்துடன் கூடிய வகுப்பறைகள் உள்ளது . மேலும் ஆண் / பெண் கழிப்பிடங்கள் சிறப்புடன் பராமரிக்கப்பட்டுள்ளது / சுவைமிகு சத்துணவு , 5.98 ஏக்கர் கொண்ட பள்ளியில் பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது . சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாப்பு நிறைந்த பள்ளியாக உள்ளது . NEET பயிற்சிக்கு தனியாக தேர்வுக்கு அனுப்ப ஏற்பாடு உள்ளது . மேல்நிலைப் பள்ளி பாடப்பிரிவுகள் 1.இயற்பியல் , வேதியியல் , கணக்கு , கணினி அறிவியல் 2. இயற்பியல் , வேதியியல் , கணக்கு , உயிரியல் 3.வரலாறு , பொருளியல் , வணிகவியல் , கணக்கு பதிவியல் கிராமப்புற மாணவர்களை நகர்புற மாணவர்களுக்கு இணையாக படிக்க வைத்து மதிப்பெண்களை பெறவும் , தன்னம்பிக்கை . வேலைவாய்ப்பு பெற்றுத்தர முயற்சி செய்து உயர்த்துவதே பள்ளியின் குறிக்கோள் ஆகும் . High Tech Lab , நூலகம் . விளையாட்டு மைதானம் , தனித்தனி ஆய்வக வசதி நல்லொழுக்கம் , நல்ல பயிற்சி . நல்ல வெற்றி தரும் பள்ளி வகுப்பு SSLC தொடர் 100 % வெற்றி தரும் . பள்ளி 6 முதல் 12 வரை தமிழ் / ஆங்கில வழிக்கல்வி வசதிகள் நிறைந்தது. அரசு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்கள் எடுத்த தகுதியும் அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களால் பாடம் நடத்தப்படுகிறது. தகுதி தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களே தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளைப்போல இப்பள்ளியில் விளையாட்டு ஓவியம் தையல் என சிறப்பு பாடங்களும் தகுதி வாய்ந்த சிறப்பு ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. செய்தியாளர் பா. கணேசன் (அனுபவஸ்தன்)

VIDEOS

RELATED NEWS

Recommended