Author: மகேஷ் குமார்

Category: கல்வி

மாதர்பாக்கத்தில் அமைந்துள்ள சிஎஸ்ஐ ஆலயத்தில் திருவள்ளூர் மாவட்ட அளவில் பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பிடித்த நேமள்ளூரை சேர்ந்த வி.ஜெனித்தா இன்பரசிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வளர்மதி பெண்கள் இயக்கம் என்கிற சமூக சேவை அமைப்பின் உதவியால் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை எலைட் மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருபவர் கும்மிடிப்பூண்டி அடுத்த நேமள்ளூர் ஊராட்சி என்.எஸ்.நகரை சேர்ந்த வினாயகம்- எழிலரசி தம்பதியரின் மகன் வி.ஜெனித்தா இன்பரசி,

இவர் தற்போது வெளியான 12ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழில் 99, ஆங்கிலத்தில் 98, பொபொருளாதாரத்தில் 99, வணிகவியலில் 99, கணக்கியலில் 100, வணிக கணிதம் மற்றும் புள்ளியியலில் 100 மதிப்பெண் என 600 மதிப்பெண்ணிற்கு 595மதிப்பெண் பெற்று, திருவள்ளூர் மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பிடித்தார்.

மாணவி ஜெனித்தா இன்பரசியின் இந்த சாதனையை பாராட்டும் விதமாக கடந்த ஞாயிறு அன்று மாதர்பாக்கம் சிஎஸ்ஐ ஆலயத்தில் திமுக இலக்கிய அணி மாவட்ட நிர்வாகி மனோகரன் பங்கேற்று, மாணவி ஜெனித்தா இன்பரசிக்கு சால்வை அணிவித்து பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கினார்.

Tags:

#gummidipoondinews #examresult #12thresult #gummidipoondinewstamiltoday #dmk #gummidipoondinewstoday #gummidipoondinewsintamil #gummidipundilocalnewstoday #gummidipundilocalnewstodaylive #gummidipundinews #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0