திருக்கருக்காவூரில் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோவிலின் திருகல்யாணம் நிகழ்ச்சி ..
ஆர்.தீனதயாளன்
UPDATED: May 30, 2023, 8:51:16 PM
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவன நாதசுவாமி திருக்கோவிலின் திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.
மேலும் ரதத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டு மேல தாளங்கள் முழங்க அம்பாளுக்கு மலர் அலங்காரத்தால் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாள் ஆசி பெற்றனர்.