Author: ரமேஷ்

Category: ஆன்மீகம்

கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக போற்றப்படுவது சுவாமிமலை முருகன் கோயிலில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழா நாட்களில் தினமும் காலை, மாலை இரு வேளையும் சுவாமி வீதியுலா நடைபெற்றது. கடந்த 2ம் தேதி காலை தன்னைத்தானே பூஜித்தலும் இரவு பஞ்சமூர்த்திசுவாமிகள் புறப்பாடு நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான 9ம் நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடனும், தேரில் எழுந்தருளினர். மங்கள வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழந்து வந்தனர். இந்த தேரோட்டத்தில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நாளை 10ம் நாளான காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. பின்னர் இரவு கொடிஇறக்கம் செய்யப்பட்டு, சுவாமி மலைக்கோயிலுக்கு திரும்ப உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

Tags:

#kumbakonamnews , #kumbakonamnewsintamil , #kumbakonamnewslive , #kumbakonamnewstoday , #kumbakonamnewstodaytamil , #kumbakonamnewspapertoday , #இன்றையசெய்திகள்கும்பகோணம் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayasithigalkumbakonamtamilnadu , #todaynewstamilnadu , #spiritual #devotional #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #aanmeegam #anmigam #anmeegam #anmegam #kumbakonamtodaynews , #kumbakonamlatestnews , #kumbakonamnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #therottam #aanmegam #anmigam #anmegam #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #peoplestruggle, #protest ,
Comments & Conversations - 0