தொப்பை குறைக்க உடற்பயிற்சி தேவையில்லை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தொப்பைக்குறைய.... உணவை நன்றாகமென்று சாப்பிடுங்கள் சாப்பிடும் போது அவசரப் படாமல் மெதுவாக மென்று சாப்பிடுங்கள். உங்கள் உணவை சரியாகமென்று சாப்பிடுவதன் மூலம் உங்களுடைய அடிவயிறு பெருகுவது குறையும். மெதுவாக சாப்பிடுவதன் மூலம் உணவை சரியாகசெரிமானம் செய்ய முடியும், உணவில் உமிழ்நீர் நன்றாக கலக்கும். இதனால் செரிமானம் விரைவாக நடைபெறுவதால், உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்காமல் இருக்கும், இதனால் உங்களுடைய அடி வயிறு பெருக்குவது குறையும். உங்களுடைய எடை குறைப்பு செயலில் தண்ணீர் மிக முக்கியமான அம்சம், வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து உங்களுடைய இனிய நாளை தொடங்குங்கள். இது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும், உங்கள் பசியைத்தணித்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிறு நிறைந்திருக்கும் சூடான அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பது இன்னும் சிறந்தது, ஏனென்றால் உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் இதன் மூலம் வெளியேற்றப்படும். உங்களுடைய உடல் சுத்தமாகும், இதனால் உங்களுடைய மனம் சுத்தமாகும், நீங்கள் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கலாம், ஒரு நாளைக்கு பலமுறை சிறிதாக தண்ணீர் குடிக்கவும், குறிப்பாக சுடுதண்ணீர் இதனால் தொப்பை குறையும். ஒரே நேரத்தில் அதிக அளவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டாம், உங்களுக்கு தேவையானதை விட அதிக உணவை உட்கொள்ளாமல் கவனமாக இருக்கவும். ஒரு சிறிய தட்டை எடுத்து அதில் கொஞ்சமாக உணவை எடுத்துக்கொண்டு சாப்பிடுவது நல்லது, இதனால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் சாப்பாட்டின் அளவு குறைந்துவிடும். சர்க்கரை அதிக அளவில் எடுத்துக் கொள்வது கல்லீரலில் கூடுதலான சுமையை ஏற்படுத்துகிறது, கொழுப்புசேர வழி வகுக்கும். மைதா, ரொட்டி, வெள்ளை அரிசியில், கேக் மற்றும் பிஸ்கட் போன்ற உணவுகளையும் முழுமையாக தவிர்க்க வேண்டும். சர்க்கரை மற்றும் இனிப்பு உணவுகளை மாலை ஐந்து மணிக்கு மேல் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இதனால் நாட்கள் செல்லச்செல்ல உங்கள் வளர்சிதை மாற்றத்தில் கடுமையான மாற்றங்கள் தொடங்கும், எனவே நீங்கள் இனிப்பு சாப்பிட விரும்பினால் காலைநேரமே சிறந்தது. ***அனுபவஸ்தன்***

VIDEOS

RELATED NEWS

Recommended