Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தேசிய அறிவியல் அருங்காட்சியக மன்றம், புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்துறை, புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றம் ஆகியற்றின் சார்பில் ரூ. 1.5 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புத்தாக்க மையத்தின் தொடக்க விழா முனைவர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் தமிழிசை புத்தாக்க மையத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, எம்.பி செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அங்கு நடைபெற்ற அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டு மாணவர்களிடம் விளக்கங்கள் கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை... குழந்தைகளுக்கு தேவையான வருங்கால விஞ்ஞானம், ஆராய்ச்சிக்கு இங்கே வழி வகை செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தோடு அப்துல் கலாம் அறிவியல் மையம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட இருக்கிறது. இது வருங்காலத்தில் குழந்தைகளின் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிக உதவியாக இருக்கும். இதன் மூலம், எந்த பள்ளியில் படிக்கும் எந்த குழந்தையும் எந்த ஆராய்ச்சி செய்யலாம் என்று கூறினார். குப்பைகளை அகற்ற ரோபோ கண்டுபிடித்திருக்கிறார்கள். புதுச்சேரியை, குப்பைகள் இல்லாத புதுச்சேரியாக மாறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சருடன் கலந்தாலோசனை செய்து திட்டங்களை வகுத்து குப்பைகள் இல்லாத புதுச்சேரியாக மாற்றும் வகையில் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் பேரறிவாளன் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பற்றி எந்த கருத்தும் இல்லை என்று அவர் பதிலளித்தார். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

Tags:

#இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையமுக்கியசெய்திகள்புதுச்சேரி #இன்றையசெய்திகள்புதுச்சேரி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #Tamilnadulatestnews #breakingnewstamil #Todaysnewstamil #Tamillatestnews #Tamilnewslatest #Tamilnewspaper #onlinetamilnews #tamilnews #tamilnewsportal #onlinetamilnewsportal #pondicherynewstodaytamil #puducheryflashnewstamil #tamiliasisoundararajan #governortamiliasi #pondicherygovernortamiliasi
Comments & Conversations - 0