• முகப்பு
  • district
  • தேனி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , அங்கன்வாடி மையம் , நியாய விலைக்கடை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு.

தேனி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , அங்கன்வாடி மையம் , நியாய விலைக்கடை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

14.06.2022 தேனி மாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , அங்கன்வாடி மையம் , நியாய விலைக்கடை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் , ஆய்வு மேற்கொண்டார் : தேனி மாவட்டம் , போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட தர்மத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , அங்கன்வாடி மையம் , மேலச்சொக்கநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடை மற்றும் சிலமலையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து இன்று ( 14.06.2022 ) மாவட்ட ஆட்சித்தலைவர் க.வி.முரளீதரன் , இ.ஆ.ப .. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . தர்மத்துபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ , மாணவியர்களின் எண்ணிக்கை . வகுப்பறை . சமையலறை . குடிநீர் , மின்வசதி . கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் , சுகாதாரப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டதுடன் வகுப்பறைகளுக்கு நேரடியாக சென்று , மாணவ , மாணவியர்களிடம் கலந்துரையாடினார் . மேலும் . தர்மத்துப்பட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை . குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் , எடை அளவிடும் கருவி , விளையாட்டு பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் ஆகியன குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு , ஆய்வு மேற்கொண்டார் . அதனைத்தொடர்ந்து , தர்மத்துப்பட்டியில் செயல்பட்டு வரும் மேலச்சொக்கநாதபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையின் விற்பனை முனைய இயந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை , பொருட்கள் வழங்கப்பட வேண்டிய குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை . மீதமுள்ள பொருட்களின் இருப்பு , அரிசி மற்றும் பொருட்களின் தரம் , எடை அளவு மற்றும் செயல்பாடுகள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் , நியாய விலைக்கடைக்கு வருகை தந்த குடும்ப அட்டைதாரர்களிடம் கடையின் செயல்பாடுகள் குறித்தும் , வழங்கப்படும் அரிசி மற்றும் குடிமைப்பொருட்களின் தரம் குறித்தும் கேட்டறிந்தார் . மேலும் , சிலமலை ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் , அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவேடு , உள் நோயாளிகள் பிரிவில் உள்ள படுக்கை வசதி , புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருகை தந்த பொதுமக்களின் எண்ணிக்கை , சிகிச்சை அளிக்கப்படும் விதம் , மருந்து , மாத்திரைகளின் இருப்பு , அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஆகியன குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின் போது , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.தண்டபாணி உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர் . வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் , தேனி . தேனி மாவட்ட செய்தியாளர் MP. ஜிவா

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended