• முகப்பு
  • district
  • கிராம சபை கூட்டம் நடைபெறுவதை ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பிய இளைஞர்கள் திணறிய திமுக ஊராட்சிமன்றத் தலைவர்.

கிராம சபை கூட்டம் நடைபெறுவதை ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பிய இளைஞர்கள் திணறிய திமுக ஊராட்சிமன்றத் தலைவர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் : கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு மற்றொரு நாளில் நடத்த மக்கள் கோரிக்கை விடுத்தார் சலசலப்பு. ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு சில நாட்கள் முன்பு அறிவித்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கிராம சபை கூட்டம் மிகவும் குறைந்த ஆட்களை வைத்து நடத்தப்பட்டதால் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. எனவே தொழிலாளர் தினத்தில் நடத்தப்படும் கிராம சபை கூட்டம் அனைத்து மக்களுக்கும் தெரிவிக்கப்படும் என கூறப்பட்டது. மேலும் கிராம சபை நடைபெறும் இடம் ,நேரம் ஆகியன பற்றி கிராம ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் ஒட்டப்படும் என்றும் தண்டோரா மற்றும் நோட்டீஸ்கள் மூலமும் மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற செயலாளர் கிரி பெண் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மிக சொற்ப அளவில் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சமூக ஆர்வலர்கள் சாம்பசிவம் மற்றும் பிரசாத் உள்ளிட்டோர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. சிறு காவேரிப்பாக்கம் ஊராட்சியில் மட்டும் 6500 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர் .எப்போது கிராம சபை கூட்டம் நடந்தாலும் அந்தக் கூட்டத்திற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள். அப்படி இருக்கும்போது நீங்கள் யாருக்கும் தகவல் அளிக்காமல் உங்களுக்கு சம்பந்தப்பட்ட ஆட்களை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி கிராம சபை கூட்டத்தை நடத்தி தீர்மானம் வாசிக்கிறீர்கள் என கேள்வி மேல் கேள்வி எழுப்பியதால் ஊராட்சி மன்ற தலைவர் பதிலளிக்க முடியாமல் திக்குமுக்காடி அமைதியானார். அதேபோல் ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்த மக்களும் எங்கள் கிராமத்துக்கு எந்த வசதி வாய்ப்பும் ஏற்படுத்தி தரவில்லை, சமுதாயக்கூடம் கடந்த ஒரு வருடமாக மூடி உள்ளது ,மின்விளக்குகள் சரியில்லை, சாலை சரியில்லை, குடிநீர் வினியோகம் இல்லை ,அரிசி ஆலைகளில் இருந்து சாம்பல் உமி பறந்துவந்து அனைவர் கண்களையும் குருடாக்கின்றது. மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வாங்காமலும், அனுமதி பெறாமலும் பல அரிசி ஆலைகள் நடத்தி வருகின்றனர் ,அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சரமாரியாக கேள்விகள் எழுப்பியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. நம்முடைய செய்தியைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் அப்பகுதி மக்களை சமாதானப் படுத்தும் விதத்தில் சமுதாயக்கூடம் உடனடியாக சீர்படுத்தி தருகின்றேன், அனுமதி இல்லாமல் நடத்தப்படும் அரிசி ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதி அளித்ததால் ஜே ஜே நகர் பகுதி மக்கள் சற்று சமாதானம் அடைந்தனர் . இந்த கிராம சபை கூட்டம் மக்களுக்குத் தெரியாமல் நடந்ததால் இதை ரத்து செய்ய வேண்டும், வேறு நாளில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என மீண்டும் சில இளைஞர்கள் கோரிக்கை வைத்ததால் அங்கு சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதைப் பற்றி சமூக ஆர்வலர் சாம்பசிவம் கூறும் போது, ஊராட்சி மன்ற செயலாளர் கிரி வாசித்த அனைத்து திட்டங்களும் இங்கு நிறைவேற்றப்படவில்லை, திமுக ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், வார்டு உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டு முறைகேடு செய்கின்றார். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஆவேசமாக கூறினார். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த். இன்றைய செய்திகள் காஞ்சிபுரம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Kanchipuram flash news,kanchipuram todays news tamil,Kanchipuram latest news,Grama sabha,The DMK panchayat leader who was choked by the youth questioned why the village council meeting was not informed

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended