எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நடிகர் சிவ பிரீத்தமு திருமணம்.

TGI

UPDATED: Mar 5, 2023, 1:07:53 PM

 

கோவை எஸ்‌.மனோகரன்‌ - சாந்தி ஆகியோரது மகன் நடிகர் மற்றும் பொறியியல் மேலாளர் எம்‌.சிவ பிரீத்தமுக்கும்‌ தர்மபுரி நகர ௮.தி.மு.க. செயலாளரும்‌, தர்மபுரி மாவட்ட நுகர்வோர்‌ கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான பூக்கடை ரவி - நகராட்சி கவுன்சிலர்‌ ராஜாத்தி ஆகியோரது மகள்‌ டாக்டர்‌ ஆர்‌. கீதாவுக்கும்‌, திருமணம்‌ கொல்லப்பட்டி பெருமாள்‌ கோவிலில்‌ நடைபெற்றது.

இதில் பிரபல தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகர் RJ விக்னேஷிகாந்த், இயக்குனர்கள் கார்த்திக் வேணுகோபாலன், கலையரசன் தங்கவேல், அ.தி.மு.க. கட்சியின்‌ மாவட்ட செயலாளர்‌. கே.பி. அன்பழகன் மற்றும் பலர்‌ கலந்து கொண்டு தலைமை தாங்கி மணமக்‌களை வாழ்த்தினர்‌.

திருமண வரவேற்பு விழா‌:

கடந்த ஞாயிற்றுக் கிழமை தர்மபுரி நகர அ.தி.மு.க செயலாளர்‌ இல்ல திருமண வரவேற்பு விழாவில்‌ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில்‌ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்‌.

இதற்க்கு முன்பு தை மாதம் கோவையில் நடந்த திருமண வரவேற்புக்கு மணமக்களுக்கும் மனமகனின் மாமனார் பூக்கடை ரவிகும் காணொளி மூலம் நடிகர் பாக்யராஜ் சிறப்பு வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தின்‌ இரண்டாம் வரவேற்பு விழா தர்மபுரி பென்னாகரம்‌ சாலையில்‌ உள்ள  மகாலில்‌ ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்‌ செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி மணமக்‌களை வாழ்த்தினார்‌.

இதில் நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்துடன் வந்து மன மக்களை வாழ்த்தி மக்களையும் மகிழ்வித்தார்.  விஜய் டிவியின்  பிரபலங்கள் மற்றும் பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

எடப்பாடியார் மற்றும் மக்கள் விருந்தோம்பல் :

திருமண வரவேற்பு விழாவுக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்கள்‌ முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விருந்திற்கு வந்த மக்களுக்கும் மணமக்களின் குடும்பத்தினரால் நல்ல விருந்தோம்பல் அளிக்க பட்டது குறிப்பிடதக்க செயல் ஆகும். 

இந்த நிகழ்வுகளின் ஏற்பாடுகளை மணமகள் கீதாவின் குடும்பத்தினர் பூக்கடை ரவி, ராஜாத்தி, பெரியண்ணன், ரமேஷ் , அசோகன்‌, வி.பாஸ்கின்‌ டிசோசா, சரண்குமார்‌ மற்றும் மணமகன் சிவாவின் குடும்பத்தினர் எஸ்‌.மனோகரன்‌, சாந்தி, வி.ராமலிங்கம், அம்சக்கலா, அனீஷ் விக்ரம், ஸ்ரீஜா, ஸ்ரீதர் மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள்‌ மற்றும் ஆயிரக்கணக்‌கான கட்சி தொண்டர்கள்‌ கலந்து நடத்தி வைத்தனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended