• முகப்பு
  • குற்றம்
  • பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே நீர்க்கசிவு , பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நீர் தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே நீர்க்கசிவு , பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.ஜெயச்சந்திரன்

UPDATED: May 31, 2023, 9:39:12 AM

தஞ்சாவூர் மாநகராட்சியில் புதிதாக 22 நீர்தேக்க தொட்டி பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் வடக்கு வாசல் ஏழாவது வார்டு பகுதியில் புதிதாக பல லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு தற்போது இறுதி கட்ட பணியில் உள்ளது. 

இன்னும் ஒரு சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் மக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே நீர்த்தேக்க தொட்டியின் பல்வேறு இடங்களிலிருந்து நீர்கசிவு ஏற்பட்டுள்ளது.

தரமற்ற முறையில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டதால் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே உடனடியாக தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு புதிதாக பாலம் கட்டி 15 நாட்களுக்குள் லாரியின் பாரம் தாங்காமல் பாலம் உடைந்து உள்வாங்கி விபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended