• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 70 ஆண்டு காலமாக சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர வலியுறுத்தி போராடி வரும் கூசாலிப்பட்டி கிராம மக்கள்

70 ஆண்டு காலமாக சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர வலியுறுத்தி போராடி வரும் கூசாலிப்பட்டி கிராம மக்கள்

மாரிமுத்து

UPDATED: May 16, 2023, 8:21:04 PM

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கூசாலிப்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த கிராமத்தில் சுடுகாட்டிற்கு சரியான பாதை வசதி இல்லமால் 70 ஆண்டுகளுக்கு மேலாக அக்கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அரசு சார்பில் சுடுகாடு கட்டிடம் அமைத்து கொடுத்த போதிலும் அதற்கு சரியான பாதை இல்லை என்பதால், தனிபட்ட நபர் ஒருவரின் சொந்த நிலத்தின் வழியாக தான் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு சென்று வந்தனர்.

பாதை அமைத்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் போராடி வருகின்றனர். இதற்கிடையில் நிலத்தின் உரிமையாளர் தனது நிலத்தினை சுற்றி கம்பி வேலி அமைத்த காரணத்தினால் உயிரிழந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அக்கிராமத்தினை சேர்ந்த பாப்பாத்தி அம்மாள் என்பவர் உயிரிழந்து விட, அவரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையெடுத்து அக்கிராம மக்கள் நேற்று இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாவட்ட தலைவர் பரமசிவன் தலைமையில் கோவில்பட்டி - கடலையூர் சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி தாசில்தார் வசந்த மல்லிகா மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தனிநபரிடம் பேசிய நிலத்தினை பெற்று சுடுகாட்டிற்கு செல்ல பாதை அமைத்து தரப்படும் என்றும் உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தினை கைவிட்டனர்.

மேலும் சுடுகாட்டு பகுதிக்கு சென்று பாதை அமைப்பது தொடர்பாக தாசில்தார் வசந்த மல்லிகா தலைமையில் வருவாய்துறையினர் ஆய்வு செய்தனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended