• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • 25 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் அவதி உற்று வந்த புத்தர் நகர் கிராமவாசிகள், திமுக ஆட்சியில் தான் சாலைகள் அமைக்கப்பட்டது என்று பெருமிதம்.

25 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாமல் அவதி உற்று வந்த புத்தர் நகர் கிராமவாசிகள், திமுக ஆட்சியில் தான் சாலைகள் அமைக்கப்பட்டது என்று பெருமிதம்.

சுரேஷ்பாபு

UPDATED: May 16, 2023, 2:04:50 PM

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈக்காடு ஊராட்சியில் புத்தர் நகர் பகுதியில் 25 ஆண்டு காலமாக சாலை வசதி இல்லாத நிலையில்,

தற்போது ஈக்காடு ஒன்றிய பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் அவர்கள் உத்தரவின் பெயரில் ஊராட்சி மன்ற தலைவர் j.லாஸ்னா சத்யா பரிந்துரைப்படி ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கிலோமீட்டர் தூரம் மெட்டல் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

25 ஆண்டு காலம் சாலை வசதி இல்லாமல் அவதியுற்று வந்த எங்களுக்கு நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு திமுக ஆட்சியில் தான் சாலை அமைக்கப்பட்டுள்ளது என்று புத்தர் நகர் கிராமவாசிகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து இந்த சாலை அமைக்கப்படுவதால் இரவில் எங்கள் வீட்டிற்கு வரும் பொழுது எந்த ஒரு தொந்தரவும் இருக்காது என்றும் மழை பெய்தாலோ நீர் நிரம்பினாலோ சாலை அமைக்கப்படுவதால் பாதுகாப்பாக நாங்கள் கருதுகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து இதுபோன்ற சாலை அமைத்துக் கொடுத்த ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்  தெரிவிக்கையில் ஈக்காடு ஊராட்சியில் சாலை வசதி இல்லாத தெருக்கள் முழுவதும் சாலை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended