• முகப்பு
  • ஆன்மீகம்
  • கும்பகோணத்தில் துக்காம்பாளையத் தெருவில் உள்ள உச்சினி மாகாளியம்மன் ஆலயத்தில் வைகாசி கோடாபிஷேகம் விழாவை முன்னிட்டு 201 பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்கள்.

கும்பகோணத்தில் துக்காம்பாளையத் தெருவில் உள்ள உச்சினி மாகாளியம்மன் ஆலயத்தில் வைகாசி கோடாபிஷேகம் விழாவை முன்னிட்டு 201 பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்கள்.

ரமேஷ்

UPDATED: May 21, 2023, 4:12:16 PM

கும்பகோணத்தில் துக்காம்பாளையத் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ உச்சினி மாகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் வைகாசி கோடை அபிஷேக (மழை பெய்யவேண்டி நடை பெறும் விழா) நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு கடந்த 12ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

விழாவையொட்டி மாகாளியம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முக்கிய நிகழ்ச்சியான பகவத் காவிரி படித்துறையிலிருந்து பக்தர்கள் கரகம், அலகுகாவடி, பால் குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து கஞ்சிவார்த்தலும், வீரனுக்கு பொங்கல் வைத்து படையலும் நடைபெற்றது. பின்னர் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் நாளை (திங்கட் கிழமை) அம்மன் சூரிய தரிசனம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended