• முகப்பு
  • விவசாயம்
  • பெல் நிர்வாகத்தை கண்டித்து ஐ.என்.டி.யு.சி.தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்.

பெல் நிர்வாகத்தை கண்டித்து ஐ.என்.டி.யு.சி.தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்.

JK 

UPDATED: May 11, 2023, 6:43:04 AM

திருச்சி பெல் நிறுவனத்தில் சிவில் பிரிவில் பணியாற்றி வரும் தொழிற்சங்க தலைவரும், ஐ.என்.டி.யு.சியின் பொதுச் செயலாளருமான கல்யாணகுமாரை பெல் நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்சியில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

பணியிட மாற்றம் செய்வதற்கு 15நாட்களுக்கு முன்பாகவே முறையான அறிவிப்பு வழங்கப்பட்டு இங்கிருந்து விடுவிப்பதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால், தன்னை பெல் நிர்வாகம் வேண்டும் என்றே திட்டமிட்டு பணியிட மாற்றம் செய்து பழிவாங்குவதாக கல்யாணகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

அதனைக் கண்டித்து இன்று காலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை ஐ என் டி யு சி உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கல்யாண குமார்...

பெல் நிறுவனத்தை எதிர்த்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் நான் தொடர்ந்து உள்ளதால் என்னை பழிவாங்கும் நோக்கத்தில் பெல் நிர்வாகம் பணியிட மாற்றம் செய்துள்ளது.

எனவே, இந்த தொழிலாளர் விரோதப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மத்திய அரசின் தொழிலாளர் அமலாக்க அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்துள்ளோம் என்று கூறினார்.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended