• முகப்பு
  • மனிதாபிமான அடிப்படையில் இன்று உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக ஐ.நா. பாத

மனிதாபிமான அடிப்படையில் இன்று உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக ஐ.நா. பாத

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24- ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது. முதலில் ராணுவ தளவாடங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை குறி வைத்து தாக்கினர். பின்னர் தலைநகர் கிவ் உள்பட முக்கிய நகரங்கள் மீதும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. மேலும் உக்ரைனில் உள்ள அனு மின் நிலையங்கள் மீதும் ரஷ்ய படை தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இருதரப்பிலும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. உயிருக்கு பயந்து இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைனை விட்டுவெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் வேண்டுகோளை ஏற்று கீவ், கார்கீவ், சுமி, மரியுபோல் உள்ளிட்ட மாகாணங்களில் ரஷ்யா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அங்கு சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற மனிதாபிமான அடிப்படையில் இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே மனிதாபிமான அடிப்படையில் மார்ச் 8 ஆம் தேதி தற்காலிக போர் நிறுத்தம் செய்ய உள்ளதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யா தெரிவித்துள்ளது. கெய்வ், செர்னிஹிவ், சுமி மற்றும் மரியுபோல் ஆகிய பகுதிகளில் போர் நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவுக்கான நிரந்தரப் பிரதிநிதி வாசிலி நெபென்சியா தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் பொருட்டு இந்த போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended