• முகப்பு
  • குற்றம்
  • சாத்தான்குளம் 2100 கிலோ கஞ்சா வழக்கில் ஆறு பேர் கைது இரண்டு பேர் தலைமறைவு கடத்தலுக்கு தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதி வசதியாக உள்ளது.

சாத்தான்குளம் 2100 கிலோ கஞ்சா வழக்கில் ஆறு பேர் கைது இரண்டு பேர் தலைமறைவு கடத்தலுக்கு தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதி வசதியாக உள்ளது.

மாரிமுத்து

UPDATED: May 11, 2023, 7:23:03 AM

தமிழ்நாடு காவல்துறை தலைவர் தமிழகத்தில் தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி கஞ்சா இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு 4ஓ ஆப்ரேஷன் படி தமிழக முழுவதும் கஞ்சா வேட்டை நடைபெற்றது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனையில் கஞ்சா பிடிபட்டது, தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்காக பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

வரும் காலத்தில் இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் மாற்றத்தை தேடி என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அதுபோல கல்லூரி மாணவ மாணவிகளிடமும் கல்லூரிக்கு நேரில் சென்று எஸ் பி பாலாஜி சரவணன் கலந்துரையாடி கஞ்சாவால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விளக்கி கூறி வருகிறார்.

இந்த நிலையில் மதுரை கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருப்பசாமிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு வழியாக கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் 40 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது காரை ஓட்டி வந்த ராஜகுமாரிடம் விசாரணை நடத்திய போது ராஜகுமாரின் கூட்டாளி ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த சுகுமாரன் வழியாக கஞ்சா வாங்கியதாக கூறப்பட்டது.

அதன் அடிப்படையில் மேற்கொண்டு விசாரணையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா. சுடலைமணி. மகேஷ் குமார். முத்துராஜ் மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டதில்,

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து 4 கோடி ரூபாய்க்கு கஞ்ச வாங்கி வந்ததாகவும் போலியான பதிவை கொண்ட கார் மூலம் கஞ்சாவை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் புதுக்குளம் என்ற இடத்தில் உள்ள தென்னந்தோப்பில் 2,100 கிலோ கஞ்சா வைத்திருப்பதாகவும் இந்தத் தோட்டம் ராஜா என்பவரின் பொறுப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டதை அடுத்து,

உடனடியாக கீரை துறை காவல் நிலைய ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையிலான தனிப்படையினர் உடனடியாக சாத்தான்குளம் அருகே உள்ள வேலவன் புதுக்குளம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்று சோதனை நடத்திய போது அங்கு இருந்த 2090 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் தூத்துக்குடி தினேஷ் புறத்தைச் சேர்ந்த ஆர்வம் மூலம் கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாகவும் மேலும் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் கூறப்பட்டது.

அவர்களிடம் இருந்து 5 செல்போன் 25 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் தொடர்புடைய தூத்துக்குடியைச் சேர்ந்த ஆரோன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் போலி பதிவு கொண்ட கார் இருப்பிடம் தெரிந்து அங்கு அந்த காரை சோதனை செய்த போது காரில் மேலும் 50 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended