• முகப்பு
  • crime
  • குடித்து விட்டு ஜாலியாக இருப்பதற்காக மோட்டார் சைக்கிள் திருடி மொத்தமாக சேமித்து வைத்த திருடன்.

குடித்து விட்டு ஜாலியாக இருப்பதற்காக மோட்டார் சைக்கிள் திருடி மொத்தமாக சேமித்து வைத்த திருடன்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரியில் சமீபகாலமாக இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க எஸ்.பி உத்தரவிட்டிருந்தார். அதன்படி போலீசார் இரவு பகல் என்று பாராமல் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திருபுவனை போலீசார் மதகடிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் விழுப்புரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பதும் அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார்சைக்கிள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது இதையடுத்து அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் ஒதியன் சாலை, பெரியகடை, கிருமாம்பாக்கம், உருளையன்பேட்டை, உள்ளிட்ட காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடி அவற்றை விற்காமல் மொத்தமாக வீட்டில் சேமித்து வைத்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் வெங்கடேசன் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்த தாகவும் அதில் சம்பளம் சரிவர இல்லாததால் குடித்து விட்டு ஜாலியாக இருக்க மோட்டார் சைக்கிளை திருடி விற்பனை செய்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து போலீசார் அவரை கைது செய்து 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended