• முகப்பு
  • india
  • பேரறிவாளன் விடுதலை ஒன்றிய அரசுக்கும் ஆளுநருக்கும் பாடம் கற்பித்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை ஒன்றிய அரசுக்கும் ஆளுநருக்கும் பாடம் கற்பித்துள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பேரறிவாளன் விடுதலைவழக்கில் தமிழ் நாடு அரசு நடத்திய சட்டப்போராட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டப் போகிறது. அடுத்தடுத்த பலமாநில அரசு Vs ஆளுநர் வழக்குகளில் பேரறிவாளன் வழக்கின்தீர்ப்பு மைல் கல்லாக இருக்கும். இந்தத்தீர்ப்பு இனி பல உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் அடிக்கடிமேற்கோள் காட்டப் படும். மாநிலஅரசின் முடிவைமீறிய ஆளுநரின்அதிகாரம், ஆளுநருக்காக வாதிடும்ஒன்றிய அரசின் போக்கு இவற்றை அழுத்தம்திருத்தமாக வரையறுத்திருக்கிறது உச்ச நீதிமன்ற நீதியரசர்நாகேஸ்வர்ராவ் அமர்வு. ‘மாநிலஅரசின் முடிவுக்கு மாநிலஆளுநர் கட்டுப்பட்டவர்’ ~ உச்ச நீதிமன்றம் உச்சரித்த இந்தவரிகளை நடைமுறைக்கு கொண்டு வர அரசியல் ரீதியாகநீண்ட காலமாகலாம். ஆனால் ஆளுநருக்கு எதிரானசட்ட ரீதியிலான போராட்டத்தில் முதல்செட்டில் வென்றிருக்கிறார் முதல்வர். எதன் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை? சட்டப் பிரிவு 142 ஐ பயன் படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. 161வது பிரிவில் முடிவெடுக்கஆளுநர் தாமதப் படுத்தினால் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்க வழி வகுக்கிறது பிரிவு 142. ஆளுநர் முடி வெடுக்காமல் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப் படி தவறு. முழுமையாக ஆராய்ந்தே பேரறிவாளனைவிடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறை வேற்றியது. உச்சநீதிமன்றம். மொத்தத்தில் இந்த தீர்ப்பு ஆளுநர்கள் மற்றும் ஒன்றிய அரசு இவைகளின் கொட்டத்தை அடகியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். செய்தியாளர்: பா. கணேசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended