• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவியார்பாளையம் மலைக்கோயில் செல்லும்  தார் சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து வந்த நிலையில் பூமி பூஜை போட்டு தொடக்கம்.

கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவியார்பாளையம் மலைக்கோயில் செல்லும்  தார் சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து வந்த நிலையில் பூமி பூஜை போட்டு தொடக்கம்.

மகேஷ் பாண்டியன்

UPDATED: May 11, 2023, 12:06:58 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கொமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவியார்பாளையம் மலைக்கோயில் செல்லும்  தார் சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

இது சம்மந்தமாக பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் S.M.சரவணன், அவர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் பேரில், உரிய நடவடிக்கை மேற்கொண்டு 15-வது நிதிக்குழு மான்யம் 2022-2023 நிதியில் ரூபாய் 7.60 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜையை முன்னாள் பள்ளி கல்வி துறை அமைச்சர் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் K.A.செங்கோட்டையன் பூமி பூஜை துவக்கி வைத்தார், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர்பண்ணாரி முன்னிலை வகித்தார்.

இதே போல் சதுமுகை ஊராட்சிக்குட்பட்ட அனுப்பர்பாளையம், நடுப்பாளையம், சின்னட்டிபாளையம், அனுப்பர்பாளையம் ஆகிய கிராம பகுதிகளில் தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி திட்ட நிதியிலிருந்து 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல் மயான பராமரிப்பு கழிவுநீர் வடிகால் அமைவதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் S.M.சரவணன்,  கிராம மக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended