• முகப்பு
  • இலங்கை
  • தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு முகத்தினை காட்டி செயற்பட்டுவருகிறது - கஜேந்திர குமார் பொன்னம்பலம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு முகத்தினை காட்டி செயற்பட்டுவருகிறது - கஜேந்திர குமார் பொன்னம்பலம்.

TGI

UPDATED: Apr 29, 2023, 8:29:49 PM

தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு முகத்தினை காட்டி செயற்பட்டுவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்றை பாராளுமன்ற அமர்வு தொடர்பில் அவர் கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பு குயின்ஸ் விதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தின் இன்று இடம் பெற்ற செய்தியாளர்களின் சந்திப்பின் போது மேலும் அவர் தெரிவிக்கையில் –

__________________________________________________

வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் :-

https://youtu.be/hSyzQMYsVeE

__________________________________________________

கடந்த 3 தினங்களாக பாராளுமன்றத்தின் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி தொடர்பில் விவாதாங்கள் இடம் பெற்றன.

இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் 16 தடவை சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுள்ளது.ஒரு முறையேனும் இது தொடர்பில் பாராளுமன்ற விவாதமே பாராளுமன்றத்தின் அங்கீகாரமே பெறப்பட்டதில்லை.

ஆனால் இம்முறை பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கோறப்படுவதின் வேறு நோக்கங்கள் இருப்பதை உணர முடிகின்றது.

தற்போது அரசாங்கம் பொருளாதார நெருக்கடியினை சந்தித்துள்ளது.சர்வதேச நிதியத்திடம் இருந்து பெற்றுக் கொண்ட பணத்துக்கு என்ன நடக்கின்றது என்று தெரியாது.

குறிப்பாக இப்பணமானது சந்கேம் இடம் பெறும் வகையில் செலவு செய்யப்பட்டுள்ளது.நாட்டில் யுத்தமொன்று இல்லாத நிலையில் அதிகரித்த இராணுவத்தின் செயற்பாடுகளையும், அதிகரித்த இராணுவ சிப்பாய்களையும் காணுகின்றோம்.இது தேவையற்றதொன்றாக நாம் கருதுகின்றோம்.

அரசாங்கத்திற்கு எதிராக கடையடைடப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண முன்னெடுக்கப்படும் பொது உடன்பாடு தொடர்பில் நாம் பங்களிப்பினை வழங்குவோம்.இந்த கடையடைடப்பு செய்யப்பட்டதின் மூலம் பலகோடிகள் வடக்கிழக்கில் இல்லாமல் போயுள்ளது.

ஆனால் கடையடைப்பின் பின்னர் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சர்வதேச நாணய நிதியம் தொடர்பிலான விவாதத்தின் பின்னரான வாக்கெடுப்பில் தாங்கள் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று,வாக்களிப்பில் கலந்து கொண்டு எதிராக வாக்களித்திருக்க வேண்டும்.

இதிலிருந்து தெளிவசாக தெரிகின்ற விடயம் தான் அரசாங்கத்தையும், ஜனாதிபதியினையும் மறைமுகமாக ஆதரிப்பதும், வெளிப்டையாக மக்களுக்கு பம்மாத்து காட்டுவதற்காக தாங்கள் அரசின் செயற்பாடுகளுக்கு எதிரி என்று மக்களை நம்பச் செய்யும் ஒரு வகையான போலி அரசியல் முகம்களை இவர்கள் காட்டுகின்றனர்.

இவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அவர் இதன் போது கூறினார்.

இந்த ஊடக சந்திப்பில் சட்டத்தரணி காண்டீபனும் கலந்து கொண்டார்

VIDEOS

RELATED NEWS

Recommended