• முகப்பு
  • சென்னை
  • தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர் நல சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்  எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் நடைபெற்றது. 

தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர் நல சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்  எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் நடைபெற்றது. 

பிரவீன்

UPDATED: May 10, 2023, 10:14:52 AM

இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் மாநிலத் தலைவர் நாச்சியப்பன், பொதுச் செயலாளர் ஹரிகுமார், பொருளாளர் ஆறுமுகம் உட்பட நிர்வாகி கலந்து கொண்டனர்.

இந்த காத்திருப்பு போராட்டத்தில் மாநில செயலாளர் ஹரிகுமார் பத்திரிகையாளர் சந்திக்கும் போது கூறியது நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறோம்.

நாங்கள் அனைவரும் உடலால் பாதிக்கப்பட்ட நிலையிலும் வேலை வேண்டி இந்த பணியை செய்து வந்தோம் ஆனால் தற்போது உள்ள நிலையில் அனைத்து ஊழியர்களுக்கும் வயது ஆகிவிட்டது தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலையில் அரசு எங்களை மாற்றுப் பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்று இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended