• முகப்பு
  • district
  • தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி வேன் மூலம் ஊழியர் சந்திப்பு ஏழு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி வேன் மூலம் ஊழியர் சந்திப்பு ஏழு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்ககோரியும், அரசு துறையில் காலியாக உள்ள காலிபணியிடங்களை நிரப்பிட கோரியும், 3 சதவிகித அகவிலைப்படியை உடனடியாக அறிவிக்ககோரியும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டியும் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழகத்தின் ஏழு முனைகளில் இருந்து வேன் மூலம் ஊழியர் சந்திப்பு பிரச்சார இயக்கம் 20.6.22 அன்று தருமபுரியில் தொடங்கி இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏழுமுனை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் தலைவர் தோழர் லெனின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பிரச்சாரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் மு.அன்பரசு அவர்களும் , மாநில துணை பொதுச் செயலாளர் இரா.மங்களபாண்டின் அவர்களும், மாநில துணை பொதுச் செயலாளர் தெ.வாசுகி அவர்களும் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரசு தலைமை பொது மருத்துவமனை வளாகம் , பஞ்சுபேட்டையில் உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம் ,வாலாஜாபாத், உத்திரமேரூர், திருப்பெரும்புதூர், படப்பை வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம் என ஒன்பது இடங்களில் பிரச்சாரம் நடைபெறுகிறது. கோரிக்கைகள் *1).புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்* *2) சிறப்பு காலமுறை ஊதியத்தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர்ப்புற நூலகர்கள் வன பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்* *3). ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்* *4).அரசுத் துறைகளில் அத்து கூலிக் முறையில் ஊர்ப்புற நூலகர்கள் எம்.ஆர்.பி செவிலியர்கள் கணினி இயக்குனர்கள் வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மதிப்பூதியம் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்* *5).மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1 2022 முதல் 3% அகவிலைப்படி அறிவித்துள்ளது . அதுபோல் மாநில அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப் படியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.* *6). கொரோனாவை காரணம் காட்டி 2 ஆண்டுகள் முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்புவிப்பு மேலும் காலம் குறிப்பிடாமல் தடை செய்ததை உடன் திரும்ப வழங்க வேண்டும்* *7). சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி வரன்முறை செய்திட வேண்டும்* *8). தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.* *9).இருபத்தி ஒரு மாத ஊதியம் மாற்ற நிலுவையை வழங்கிட வேண்டும்* *10).WIPRO வசமுள்ள IFHRMS திட்டத்தில் உள்ள குளறுபடிகள் மற்றும் குறைகளை சரி செய்து தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்* *11. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் .இரண்டு ஆண்டுகளாக விடுவிக்கப்படாத கொரோனா சிகிச்சைக்கான தொகையை உடனே விடுவிக்க வேண்டும்* *12. கொரோனா காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிபந்தனையின்றி கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.* *உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், வட்ட கிளை நிர்வாகிகள், அனைத்து துறைவாரி சங்கங்களின் நிர்வாகிகள், தோழமை சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து துறை ஊழியர்களும் அந்தந்த வட்டங்களில் வரும் வேன் பிரச்சார நிகழ்வில் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended