Author: THE GREAT INDIA NEWS

Category:

கும்பகோணம் : கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், தேவனாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகளை அங்கத்தினர்களாக சேர்க்க வேண்டி விண்ணப்பம் அளித்து 3 ஆண்டுகள் கடந்த பின்பும், இதுவரை சேர்க்காததால், அவர்களுக்கு ஜனநாயக முறைப்படி, வாக்களிக்கும் உரிமையும், வேளாண் கடன் பெறும் உரிமையும் மறுக்கப்படுவதால் அரசின் சலுகைகளும், அரசின் திட்டங்களின் பயன்களையும் பெற முடியாத நிலையுள்ளது இதனை கண்டித்து கும்பகோணம் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம், தேவனாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில், அப்பகுதியில் உள்ள விவசாயிகளை அங்கத்தினர்களாக சேர்க்க வேண்டி உரிய விண்ணப்பம் அளித்து 3 ஆண்டுகள் கடந்த பின்பும் இன்னமும் சேர்க்கப்படாமல், அவர்களது விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டுள்ளது, இதனால் இவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தமிழக அரசின் பயிர் கடன் மறுக்கப்படுகிறது, அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை, ஜனநாயக உரிமையான, கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்படுகிறது. இந்நிலை இச்சங்கத்தில் மட்டுமல்லாது, தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு சங்கங்களிலும், ஏன் மாநில அளவிலும் இதுபோன்ற நிலை தான் தமிழகத்தில்; ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் நீடிக்கிறது, எனவே இதன் மீது தமிழக அரசும், கூட்டுறவுத்துறையும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனைத்து விவசாயிகளும், எந்தவித பாகுபாடும் இன்றி சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில், அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கும்பகோணத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட துணை செயலாளர் என் கணேசன் தலைமையில் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், துணை மேலாளரிடம் இது குறித்த கோரிக்கை மனுவும் அளித்தனர் இதில், தேவனாஞ்சேரி ஊ.ம தலைவர் எஸ் ராஜாராம், மாநில துணை தலைவர் டி ரவீந்திரன், மாவட்ட செயலாளர் என் வி கண்ணன், மாவட்ட தலைவர் பி செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் பேட்டி : டி ரவீந்திரன், மாநில துணை தலைவர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Tags:

Comments & Conversations - 0