• முகப்பு
  • india
  • தேசிய கீதத்துக்கு இணையாக வந்தேமாதரம் பாடலுக்கு அந்தஸ்து. மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ்.

தேசிய கீதத்துக்கு இணையாக வந்தேமாதரம் பாடலுக்கு அந்தஸ்து. மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேசியகீதத்துக்கு இணையாக வந்தே மாதரம் பாடலுக்கு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜன கண மன தேசிய கீதத்துக்கு இணையாக வந்தே மாதரம் பாடலுக்கு அந்தஸ்து வழங்கவேண்டும், அனைத்து பள்ளி, கல்விநிலையங்களில் வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி வக்கீல் அஸ்வினிகுமார்உபாத்யாய் டெல்லி ஐகோர்ட்டில் பொது நலமனு தாக்கல் செய்து உள்ளார். அந்தமனுவை நீதிபதி விபின்சங்கி ( பொறுப்பு ), நீதிபதி சச்சின்தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாய் ஆஜராகி, வந்தேமாதரம் பாடலை தேசிய கீதமாக சென்னை ஐகோர்ட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு அங்கீகரித்து, கல்வி நிலையங்களில் வாரம் ஒரு முறை பாட வேண்டும் என்றும் தெரிவித்தது. மேலும் இதுத்தொடர்பாக மந்திரி சபை குழுவை அமைக்க ஐகோர்ட்டு உத்தரவு இட்டும், எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவாதிட்டார். வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஜன கண மன தேசியகீதத்துக்கு இணையாக வந்தே மாதரம் பாடலுக்கு அந்தஸ்து வழங்க கோரிய மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு, தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ( என்சிஇஆர்டி ), டெல்லி அரசு ஆகியவற்றுக்கு உத்தரவு இட்டு, விசாரணையை நவம்பர் 9 ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். முன்னதாக, இந்த பொது நல மனு விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகவும் நீதி பதிகள் கருத்து தெரிவித்தனர். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended