• முகப்பு
  • other
  • சிட்டுக்குருவியும் கூட்டுக்குடும்பம் ?

சிட்டுக்குருவியும் கூட்டுக்குடும்பம் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அழிந்துவரும் தமிழ் பண்பாட்டில் முக்கியமான ஒன்று கூட்டு குடும்பம். எப்படி சிட்டுக்குருவிகளை இன்று காண்பது அரிதாக இருக்கிறதோ அதேபோல் கூட்டுக் குடும்பத்தை காண்பதும் அரிதாகி விட்டது இந்த நூற்றாண்டில்... கூட்டு குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை விட குடும்பத்தில் பெருகும் மகிழ்ச்சி அதிகம் என்பதனை பலபேர் உணராததால் தான் இந்த நிலை. இது என் வாழ்க்கை, உன் வாழ்க்கை என்பதை துறந்து "நம் வாழ்க்கை" என்று எண்ணி வாழ்வதுதான் கூட்டுக்குடும்பம். முந்தைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்று தித்திப்பாக வாழ்ந்துவந்தனர் நம் முன்னோர்கள். ஆனால், காலப்போக்கில்... "ஐயோ! கூட்டுக்குடும்பமா... சரிப்பட்டு வராது" என்ற நிலை வந்தது. இதற்கு காரணம் சுயநலம், ஈகோ, சகிப்புத்தன்மை இல்லாத நிலை. கூட்டுக்குடும்பம் என்றால் சகிப்புத்தன்மை தான். சகிப்புத்தன்மை இல்லாவிடில் குடும்பம் உடனே சிதறிவிடும். ஒரு பிரச்சனை என்றால் அதனை தொடர்புடையவரோடு மனம் விட்டு பேசாமல் இருப்பதே கூட்டுக் குடும்பத்திற்கு ஏற்படும் முதல் எதிரி. மனம் விட்டு சிறிது பேசினால் தீராத பிரச்சனை என்று எதுவும் இல்லை இந்த உலகத்தில். ஆனால்,ஏனோ? மனம் விட்டுப் பேச தான் இந்த உலகத்தினருக்கு நேரமில்லை போலும். தன் வாழ்க்கை தன் சந்தோஷம் என்று நினைத்து வயதானவர்களை தனியே தவிக்க விட்ட நிலைதான் கூட்டுக்குடும்பம் சிதைந்ததற்கு காரணம். "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்பதனை மக்கள் இன்றைய நாளில் மறந்தே விட்டனர். பேராசையின் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கின்றனர் மக்கள். தன் உறவுகளை விட ஈகோ தான் முக்கியம் என்று நினைக்கின்றனர். சுயநலத்தை காட்டிலும் பொதுநலம் பெரிது என்று சிந்திக்க மறுக்கின்றனர். இந்த நிலை என்று மாறுமோ..... ராகா ராஜமணி இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,madurai news,karur news,dharmapuri news,virudhunagar news,chennai news,kovai news,Trichy news,nilgiri news,salem news,tuticorin news,dindigul news,Thirupur news,pudukottai news,cudaloore news,coimbatore news today,chengalpet news today tamil,featured article,joint family,family,sparrow,special articlefamily story,stories

VIDEOS

RELATED NEWS

Recommended