Author: லட்சுமி காந்த்

Category: குற்றம்

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியில் ஹரி கிருஷ்ணன் (60) நீலாவதி (55) தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பேர் அருளாளன் வயது (38), இளைய மகன் யோகா நந்தம் (35) என இரண்டு மகன்கள் உள்ளனர். தந்தை அரிகிருஷ்ணன் சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்து வருகின்றார்.

பேர்அருளாளன் பத்து வருடங்களுக்கு முன்பு டிவிஎஸ் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்தார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பேர் அருளாளன் மனநோயால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார் என தெரிய வருகிறது.

இந்நிலையில் வையாவூர் ஜங்ஷன் அருகே உள்ள நீலாவதியின் வீட்டுக்கு சென்ற அக்கம்பக்கத்தினர் நீலாவதி இறந்து கிடந்தது கண்டு அதிசியுற்று தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த தாலுக்கா காவல்துறையினர் நீலாவதியின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டதில், மூத்த மகன் பேர்அருளாளன் தன் தாய் நீலாவதி மீது அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு கொன்றதாக தெரிய வருகிறது என கூறினர்.

தலை மறைவாக உள்ள மூத்த மகன் பேர் அருளாளனை பிடித்தால் தான் மேற்கொண்டு உண்மைகள் தெரிய வரும் என காவல்துறை தரப்பில் கூறுகின்றனர்.

அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு தாயை கொன்ற தலைமகனின் செயல் வையாவூர் பகுதியில் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது.  

நத்தப்பேட்டை பகுதியில் சுற்றி வந்த பேர்அருளாளனை கைது செய்து தாலுக்கா காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளதாக தகவல் தெரியவந்தது.

Tags:

#இன்றையசெய்திகள்காஞ்சிபுரம் , #murder #crime #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalkanchipuramtamilnadu , #indrayaseithigalkanchipuram , #todaynewskanchipuramtamilnadu , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #kanchipuramtodaynews , #kanchipuramlatestnews , #kanchipuramnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnewstodaystamilnadunews , #indiabusinesstoday , #peoplestruggle
Comments & Conversations - 0