Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் இதற்கு மாநில அரசு துணை போவதை கண்டித்தும் மின்துறை ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதுபோல் புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகளும் மின் துறையை தனியார் மயமாக்க கூடாது என்று வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களையும் நடத்தி அங்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மின் துறையை தனியார் மயமாக்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் மின்துறை ஊழியர் மற்றும் அரசியல் கட்சியினரும் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் தனியார் ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் ,விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் என கூட்டணி கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் புதுச்சேரியில் உள்ள மின் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் லாபத்தில் இயங்கும் மின்துறையை அரசு மின்துறையாகவே செயல்பட வேண்டும் என வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதன் ஒரு பகுதியாக இன்று புதுச்சேரியில் பாகூர், கரிக்கலாம்பாக்கம், மண்ணாடிப்பட்டு, கிருமாம்பாக்கம், திருபுவனை, மதகடிப்பட்டு,, புதுச்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு மின் துறையை தனியார் மயமாக்க கூடாது என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டு சாலையின் இருபுறமும் கைகோர்த்து நின்றபடி தங்களது எதிர்ப்பை தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்

Tags:

#இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday #pondicherynewstamil #pondicherytodaynews #pondicherylatestnews
Comments & Conversations - 0