• முகப்பு
  • world
  • பிரபஞ்சத்தின் ரகசியம் , அதே இடம், புதிய தொழில்நுட்பம் இது நம்பமுடியாதது!

பிரபஞ்சத்தின் ரகசியம் , அதே இடம், புதிய தொழில்நுட்பம் இது நம்பமுடியாதது!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மிகுந்த காத்திருத்தலின் பின், ஜெர்மன் நேரம் நள்ளிரவு 12:30 மணியளவில், ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி எடுத்திருந்த முதல் படத்தை, வெள்ளை மாளிகையிலிருந்து அதிபர் ஜோ பைடன் மூலமாக நாஸா வெளியிட்டது. 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த ஆரம்ப அண்டத்தின் ஒரு பகுதி அப்படத்தில் இருந்தது. நட்சத்திரங்களும் (Stars), நட்சத்திர மண்டலங்களும் (Galaxy) (நமது சூரியகுடும்பமும் இது போன்ற மில்கிவே மண்டலத்தின் ஒரு சிறு புள்ளியே )ஒளி(ர்)ந்து கொண்டிருக்கத் துல்லியமாக எடுக்கப்பட்ட படம். ‘ஈர்ப்பு வில்லை’ (Gravitational Lensing) எனப்படும் அதியீர்ப்பின் அண்டவெளி வளைவில், ஒளியும் வளைந்திருக்கும் விளைவுகளை அப்படத்தில் நீங்கள் தெளிவாகப் பார்க்கலாம். இது 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரான படம். மேலும் அரை பில்லியன் ஆண்டுகள் பின்னோக்கி, அதாவது 13.5 ஆண்டுகள் வரை ஜேம்ஸ் வெப் படமெடுக்க இருக்கிறது. அண்டம் உருவாகி வெறும் 300 மில்லியன் ஆண்டு வயதாக இருக்கும்போதான படமாக அது இருக்கும். சரியாகச் சிந்தித்துப் பாருங்கள். நாம் பார்ப்பதற்காகவே, 13 பில்லியன் ஆண்டுகளாகப் பயணம் செய்து வந்த ஒருசில போட்டான்கள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கண்ணாடிகளில் மோதியிருக்கின்றன. அத்துடன் அவற்றின் பயணத்திற்கான காரணம் முடிவடைந்துவிட்டது. அந்த ஒருசில போட்டோன்களே, போட்டோக்களாகியிருக்கின்றன. நாளை மேலும் சில படங்கள் நாஸாவால் வெளியிடப்படலாம். இந்தப் படத்தைப் பார்த்ததும், “அட! இதிலென்ன இருக்கிறது? வெறும் புள்ளிகளும் ஒளிவீச்ககளும் மட்டுமே தெரிகின்றன. இதற்காகவா 25 வருட உழைப்பையும், 10 பில்லியன் டாலர்களையும் செலவழித்தார்கள்?” என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், தலையை CT Scan மூலம் படமெடுத்துப் பார்க்கும்போது, அதிலுள்ளவை உங்களுக்கு வெறும் கோட்டுப். படம்தான். ஆனால், அதற்கெனப் பயிற்சிபெற்ற மருத்துவர்களுக்கோ பல தகவல்களைக் கொடுக்கும் பொக்கிசம். அதுபோலத்தான், ஜேம்ஸ் வெப் எடுத்திருக்கும் இந்தப் படங்களும் அறிவியலாளர்களுக்குத் தகவல் சுரங்கமாக இருக்கும்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended