• முகப்பு
  • இந்தியா
  • இந்தியாவின் இதயமான நாடாளுமன்றத்திற்கு மூளையாக தமிழகத்தின் செங்கோல்.

இந்தியாவின் இதயமான நாடாளுமன்றத்திற்கு மூளையாக தமிழகத்தின் செங்கோல்.

TGI

UPDATED: May 28, 2023, 2:23:51 PM

இந்தியாவின் பாரம்பரிய சின்னமான செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவப்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நாம் கடமையின் பாதையில் நடக்க வேண்டும், பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை செங்கோல் நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என செங்கோல் விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

பிறகு செங்கோலை ஏந்தியவாறு, ஆதீனங்களிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி, தரையில் விழுந்து, செங்கோலை வணங்கினார் பிரதமர் மோடி.

சிறப்பு பூஜைக்குப் பின் பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது.

தமிழக செங்கோலுக்கு இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் என சர்வ மத பூஜை நடந்தது.

தமிழக செங்கோலை நிறுவும் முன் ஆதினத்திடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி.

நாடாளுமன்ற கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பிரதமர் மோடி கௌரவித்தார்.

பின்னர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தமிழக செங்கோல் நிறுவப்பட்டது, சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி, செங்கோல் நிறுவும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 20 ஆதீனங்கள் பங்கேற்றனர்.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்கும் முன் காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended