• முகப்பு
  • குற்றம்
  • தூத்துக்குடி மாநகராட்சியில்  அனுமதி இன்றி குடிநீர் இணைப்பு எல்லை மீறும் ஆளும் வர்க்கம்.

தூத்துக்குடி மாநகராட்சியில்  அனுமதி இன்றி குடிநீர் இணைப்பு எல்லை மீறும் ஆளும் வர்க்கம்.

மாரிமுத்து

UPDATED: May 12, 2023, 8:45:43 PM

தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது, இந்த 60 வார்டுகளிலும் தற்போது புதியதாக குடிநீர் பைப் பதிக்கப்பட்டு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது, அதுபோல பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டு பணிகளும் முடிந்து விட்டால் அந்தப் பகுதியில் புதியதாக ரோடு போடப்பட்டு மாநகராட்சி நகரை அழகுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆசிரியர் காலனி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் புதியதாக ரோடு போடப்பட்டிருந்தது போடப்பட்டிருந்த ரோடு ஆசிரியர் காலனி நாலாவது தெருவை சேர்ந்த நேசம் மணிவண்ணன் என்பவர் மாநகராட்சியில் எந்த ஒரு அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக குடிநீர் இணைப்பு புதியதாக ரோடு போடப்பட்ட ரோடு உடைத்து குடிநீர் இணைப்பு எடுத்துள்ளார்.

இது பற்றி மாநகராட்சிக்கு தகவல் கிடைத்தவுடன் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உத்தரவின் பேரில் பகுதியை பார்வையிடுமாறு அரசு அலுவலர்களுக்கு கட்டளையிட்டார்.

இதனை அடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சென்று பார்த்த போது பத்து நாட்களுக்கு முன்பு போடப்பட்டிருந்த ரோடு உடைக்கப்பட்டு மாநகராட்சியில் எந்த ஒரு அனுமதி பெறாமல் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாநகராட்சி குழாய் ஆய்வாளர் ஆறுமுக குமார் என்பவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதே போல தான் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் அதிகார வர்க்கத்தில் உள்ள அந்தந்த வார்டில் உள்ள பிரமுகர்கள் மாநகராட்சிக்கு முறைப்படி பணம் செலுத்தி அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோல 60 வார்டுகளிலும் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிய வருகிறது.

அப்படி ஆய்வு செய்யும் பட்சத்தில் குறைந்தபட்சம் 60 வார்டுகளிலும் மூவாயிரத்துக்கும் மேல் திருட்டுத்தனமான குடிநீர் இணைப்பு இருக்கும் என்று தெரிய வருகிறது.

தற்போது மாநகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்து மாநகராட்சி அனுமதி இன்றி குடிநீர் இணைப்பு பெறப்பட்டிருந்தால் அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல எந்த ஆண்டு முதல் திருட்டுத்தனமாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதோ அதற்கான கட்டணம் அபதார தொகை வசூலிக்கப்படும் என்று தெரிய வருகிறது.

மாநகராட்சி நிர்வாகம் தற்போது அதிரடியாக இந்த திருட்டுத்தன குடிநீர் இணைப்பு விவகாரத்தில் விஸ்வரூபம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருகிறது.

VIDEOS

RELATED NEWS

Recommended