• முகப்பு
  • pondichery
  • 38- க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் கைது

38- க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய கொள்ளையன் கைது

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி ராஜா இவர் உருலயன்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 14ஆம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த. PY –01-CD-8860 என்ற எண் கொண்ட TAVERA காரை காணவில்லை என்று தெரிவித்திருந்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து உருளையன்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் காணாமல்போன காரில் ஜி.பி.ஆர்.எஸ் வசதி இருந்ததால் அதன் மூலம் போலீசார் தேடினர் அப்போது அந்த கார் தமிழக பகுதியான தெள்ளார் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பியது தெரியவந்தது. இதனை அடுத்து அங்கு சென்ற புதுச்சேரி போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் புதுச்சேரியில் காரை திருடி சென்றது கரூர், கீழ்பஞ்சம்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. செம்மர கடத்தல் வழக்கில் சுரேஷ் ஏற்கனவே வேலூர் சிறையில் இருப்பதால் அவரை புதுச்சேரி போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். புதுச்சேரி போலீசார் விசாரணை போது சுரேஷ் அளித்த வாக்குமூலத்தில் புதுச்சேரி அண்ணாநகரில் திருடப்பட்ட காரை தெள்ளார் பெட்ரோல் பங்கில் நிறுத்தி ஜிபிஆர்எஸ் கருவியை கழட்டி வீசிவிட்டு வேலூர் வாணியம்பாடி பகுதியில் விற்பனை செய்ய சென்றதாகவும், அங்கு விலை படியாததால் மீண்டும் காரை புதுச்சேரி அடுத்த கன்னிக்கோவிலில் தனக்கு சொந்தமான அப்பார்ட்மெண்டில் நிறுத்தி வைதிருதி வைத்து இருப்பதாகவும் தெரிவித்திருந்தான். இதனை அடுத்து அங்கு சென்ற புதுச்சேரி போலீசார் காரை பறிமுதல் செய்து மீண்டும் அவரை வேலூர் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆள் கடத்தல், வழிப்பறி, கொலை, கொள்ளை, திருட்டு, மற்றும் செம்மர கடத்தல் என 38- க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்

VIDEOS

RELATED NEWS

Recommended