• முகப்பு
  • மணப்பாறை அருகே பாதையின்றி ஆற்று நீரை கிராம மக்களுடன் சேர்ந்து தவழ்ந்து சென்று கடக்கும் மாற??

மணப்பாறை அருகே பாதையின்றி ஆற்று நீரை கிராம மக்களுடன் சேர்ந்து தவழ்ந்து சென்று கடக்கும் மாற??

Entertainment

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மணப்பாறை அருகே பாதையின்றி ஆற்று நீரை கிராம மக்களுடன் சேர்ந்து தவழ்ந்து சென்று கடக்கும் மாற்றுத் திறனாளி. தனியார் பாதை அமைக்க விடாமல் தடுப்பதாக மக்கள் புகார்.   திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் உள்ள குளத்துக்காடு பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மழைகாலம் தொடங்கியதால் அந்த பாதைக்கு பதில் மாற்று பாதை தருவதாக ஊராட்சி நிர்வாகம் கூறி ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை நீர் செல்லும் வழித்தடமாக மாற்றினார். இதுமட்டுமின்றி ஊராட்சி நிர்வாகம் கூறியபடி மாற்றுப் பாதை அமைக்கும் பணியும் நடைபெற்றது. ஆனால் தனியார் ஒருவர் அரசின் நிலத்தை ஆக்கிரமித்து அதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதை அமைக்கும் போது பணியை சம்மந்தப்பட்ட தனிநபர் தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதையின்றி தவித்து வந்த மக்கள் தற்போது பொன்னணி ஆற்றை கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதே போல் நடந்து செல்வதற்கு சில மணல் மூட்டைகளையும், செடிகளையும் போட்டு அதில் நடந்து செல்லும் வகையில் அமைத்துள்ளதோடு ஆபத்தான நிலையில் தான் அதில் நடந்து செல்கின்றனர். இதுமட்டுமின்றி மாற்றுத் திறனாளிகள் கூட தவழ்ந்து கொண்டே ஆற்றைக் கடப்பதை பார்க்கும் போது காண்போரை மிகுந்த மனவேதனைக்கு ஆளாக்கி உள்ளது. மேலும் மழை அதிக அளவில் வந்தால் மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்பதுடன் தனிதீவு போல் குளத்துக்காடு மக்களின் நிலை ஆகிவிடும் என்பதால் பாதியில் நிறுத்தி வைத்துள்ள பாதை அமைக்கும் பணியை மீண்டும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

VIDEOS

RELATED NEWS

Recommended